தொடர் நாயகன், வசூல் நாயகன், என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே வியாபரம் ஆனதால், அவரது மார்க்கெட் இன்னும் உயரந்துள்ளது. ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றவர்களின் படங்கள் மட்டுமே பூஜை போட்டதும் வியாபாரம் முடிந்துவிடும் நிலையில், அந்த வரிசையில் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார்.
இப்படி முன்னணி ஹீரோவாக இருந்தாலும், நட்பு அடிப்படையில் பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இப்படி தொடர்ந்து நடித்தால், ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்பட்டு விடும், என்று அவரிடம் சிலர் கூறினாலும், என்ன செய்வது நட்புக்காக செய்ய வேண்டியுள்ளது, என்று கூறிவிட்டு தொடர்ந்து கெளரவ வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் படங்களின் இயக்குநர்கள், இனி எந்த படங்களிலும் கெளரவ வேடத்தில் நடிக்க வேண்டாம், என்று கேட்டுக்கொண்டதோடு, ஏன் அதை தவிர்க்க வேண்டும், என்பதையும் அவருக்கு பாடம் எடுக்க, அவர்களது பாடத்தை மூளையில் ஏற்றிக்கொண்ட விஜய் சேதுபதி, இனி கெளரவ வேடத்தில் நடிக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.
விஜய் சேதுபதியின் இந்த திடீர் முடிவால், அவரை கெளரவ வேடத்தில் சிறு காட்சியில் நடிக்க வைக்க வேண்டும், என்று நினைத்துக் கொண்டிருந்த பல முதல் பட இயக்குநர்கள் அப்செட்டாகியுள்ளார்கள்.
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...
பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் ஆர்...