தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் தொடர் வெற்றி படங்களில் நடித்து வருவதோடு முன்னணி நாயகியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘ரெயின்போ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை பல தரமான படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்கள்.
தங்களின் முதல் படைப்பிலிருந்தே, தனித்துவமான கதைககளன்களுடன், தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். 'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'அருவி', 'கைதி' உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து தங்களின் முத்திரையைப் பதித்து வரும் ட்ரீம் வாரியர், தங்களின் அடுத்த தயாரிப்பாக ராஷ்மிகா நடிப்பில் ‘ரெயின்போ’ படத்தை அறிவித்துள்ளது.
சாந்தரூபன் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் தேவ் மோகன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கே எம் பாஸ்கரன் ஒளிப்பதிவை கவனிக்கவுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பாளாராக தேசிய விருது பெற்ற பங்களான் பொறுப்பேற்றுள்ளார்.
இப்படம் குறித்து கூறிய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, “வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு படைப்பாக 'ரெயின்போ' இருக்கும் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. எங்களின் ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஏகோபித்த வரவேற்பையும், வாழ்த்தையும் தந்து வரும் ரசிகர்கள், 'ரெயின்போ'வையும் அதே அளவு ரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம். படத்தின் அற்புதமான நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இதைச் சாத்தியமாக்குவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
படத்தின்இயக்குநர் சாந்தரூபன் கூறுகையில், “இதுவரை இந்திய சினிமா பார்த்திராத ஒரு காதல் ஃபேண்டஸி கதையாக 'ரெயின்போ' இருக்கும். ராஷ்மிகாவின் வேறொரு பரிமாண நடிப்பை நீங்கள் திரையில் பார்ப்பீர்கள். புதுமையான கதைக்களன் கண்டிப்பாகப் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் ஆச்சரியப்படுத்தும்” என்றார்.
நடிகை ரஷ்மிகா கூறுகையில், “ஒரு பெண் கதாபாத்திரத்தின் பார்வையில் சொல்லப்படும் கதையில் முதல் முறையாகப் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்துக்குத் திரையில் உயிர் கொடுக்க ஆவலாக இருக்கிறேன். உங்களை பொழுதுபோக்கும், ஆச்சரியப்படுத்தும் ஒரு படமாக ரெயின்போ இருக்கும். அந்தப் பெண் கதாபாத்திரத்துடனான ரசிகர்களின் பயணம் உற்சாகமானதாக இருக்கப் போகிறது. அதற்குத் தயாராகுங்கள்” என்றார்.
ஃபேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாக இருக்கும் ’ரெயின்போ’ படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...