இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ’தக்ஷின் 2023’ என்ற தலைப்பில் தென்னிந்திய ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு இரண்டு நாட்கள் நடத்தப்பட உள்ளது. தென்னிந்திய திரையுலகின் முன்னேற்றத்திற்கான இந்த மாநாட்டில் சினிமா தொழிலின் முன்னேற்றத்திற்காக பல்வேறு தலைப்புகளில் பல நிபுணர்கள் பேசப்போகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு குழுவில் தமிழ் சினிமா சார்பில் பங்கேற்றுள்ளவர்களில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவாவும் ஒருவர். திரையுல முன்னேற்றதிற்கான உச்சிமாநாட்டை ஒருங்கிணைக்கும் குழுவில் ஈடுபட்டுள்ள தயாரிப்பாளர் சிவா, அதே சினிமாவில் கமிஷன் வேட்டையை நிகழ்த்தி ஒரு படத்தின் வெற்றியை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த கமிஷன் வேட்டை தக்ஷின் நிகழ்ச்சிக்கு தொடர்பு இல்லாதது என்றாலும் தற்போது இந்த நிகழ்ச்சிக்காக இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், சிவாவிடமே இது குறித்து கேட்க நிருபர்கள் முயன்றார்கள். ஆனால், அதற்கு பி.ஆர்.ஓ அனுமதிக்கவில்லை. இருப்பினும், சிவாவின் கமிஷன் வேட்டை குறித்து நிருபர்கள் பேசிக்கொண்டது தான் தற்போது கோலிவுட்டின் பரபரப்பு செய்தியாகியிருக்கிறது.
அதாவது, பாக்யராஜின் மகன் சாந்தனு கதாநாயகனாக நடித்து பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட ‘இராவணக் கோட்டம்’ திரைப்படத்தின் வெளியீட்டு பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில், துபாயில் நடத்தப்பட்ட அப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொடர்பாக பல சர்ச்சைகள் வெடித்தது.
இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னையில் இருந்து பத்திரிகையாளர்களை அழைத்து செல்ல தயாரிப்பாளர் விரும்பினார். ஆனால், படத்தின் பி.ஆர்.ஓ இது சரிபட்டு வராது, என்று மறுப்பு தெரிவித்துவிட, இந்த கேப்பில் புகுந்து கடா விட்ட முடிவு செய்த டி.சிவா, அந்த வேலையை நான் பார்த்துக்கொள்கிறேன், என்று கூறி பத்திரிகையாளர்கள் பெயரில் தனக்கு தெரிந்தவர்கள், சொந்த பந்தங்கள் என்று பலரை துபாய்க்கு அழைத்து சென்றாராம். அப்படி அழைத்து செல்லப்பட்ட சுமார் 40-க்கும் மேற்பட்டவர்களில் 18 பேர் மட்டுமே பத்திரிகையாளர்கள் என்று சொல்கிறார்கள்.
துபாய் விஷயம் இப்படி சர்ச்சையை கிளப்பியது ஒரு பக்கம் இருந்தாலும், துபாயில் நடந்த நிகழ்ச்சி குறித்து பெரிய அளவில் செய்தி வரவில்லை. இதனால், நாயகன் சாந்தனுவின் தந்தை கே.பாக்யராஜ் ரொம்பவே அப்செட்டாகி விட்டாராம். எப்படியாவது மகனை சினிமாவில் ஆளாக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும் அவருக்கு இந்த சர்ச்சை தர்மசங்கடத்தை கொடுத்துவிட்டது. இதனால், தனக்கு தெரிந்தவர்களிடம், ”தான் வேண்டாம் என்று சொல்லியும் தயாரிப்பாளர் துபாயில் நிகழ்ச்சி நடத்தினார். இங்கிருந்து பத்திரிகையாளர்களை அழைத்து செல்ல சுமார் 40 லட்சத்திற்கு மேல் செலவானதாக சொல்கிறார்கள். ஆனால், அதற்கான எந்த ஒரு பலனும் படத்திற்கு கிடைக்கவில்லை” என்று புலம்பினாராம்.
இந்த நிலையில், மீண்டும் கடா வெட்ட முயற்சித்த டி.சிவா, துபாய்க்கு அழைத்து செல்லாத பத்திரிகையாளர்களை சமாதனப்படுத்துவதாக கூறி ஒரு தொகையை ஆட்டயப்போட்டு விட்டதாக சொல்கிறார்கள். அதாவது, பத்திரிகையாளர்கள் கோபத்தை தணித்து அவர்களை சமாதானப்படுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறார். தயாரிப்பாளரும் சிவாவின் பேச்சை கேட்டு பெரிய தொகை ஒன்றை கொடுத்தாராம். வழக்கம் போல், தனக்கு தெரிந்தவர்களை கொண்ட சிறிய பட்டியல் ஒன்றை தயார் செய்த சிவா, அதில் இருப்பவர்களை கவனித்து விட்டு மற்ற பணத்தை ஸ்வாகா செய்துவிட்டாராம்.
ஏற்கனவே, வேந்தர் மூவிஸ் மனன் விவகாரத்திலும் சிவா விசாரணைக்கு எல்லாம் ஆஜரானது ஒரு பக்கம் இருந்தாலும், அதே நிறுவனத்தில் திரைப்பட தயாரிப்புகளை கவனித்துக் கொண்ட போது சில முன்னணி நடிகர்களிடம் கமிஷன் கேட்டதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மருத்துவ சீட் வாங்கித்தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த மதன், வேந்தர் மூவிஸ் என்ற நிறுவனம் சார்பில் திரைப்படங்கள் தயாரித்தார். அப்போது இதே சிவா தான் அந்த நிறுவனத்தில் வரவு செலவு கணக்குகளை பார்த்தார். அது மட்டும் அல்ல, அந்த நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைப்பதற்காக அவருக்கு மிகப்பெரிய தொகையை சம்பளமாக பேசிவிட்டு, அதில் ஒரு பெரிய தொகையை டி.சிவா கமிஷனாக விஜய் சேதுபதியிடம் கேட்டதாக தகவல் ஒன்று வெளியாகி பல இணையதளங்களில் செய்தியாகவும் வெளியானது.
நன்றி பாலிமர் தொலைக்காட்சி
இதனால் கடுப்பான சிவா, பத்திரிகையாளர்களிடம் “நான் கமிஷன் கேட்டதை நீங்க பாத்தீங்களா?” என்று பொங்கிய நிகழ்வுகள் எல்லாம் அப்போது நடந்திருக்கிறது. அதன் பிறகு இதுபோன்ற கமிஷன் விஷயங்களில் தலையிடாமல் இருந்தவர் தற்போது ‘இராவணக் கோட்டம்’ பட தயாரிப்பாளரை தன்வசப்படுத்தி கமிஷன் வேட்டையை தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...