வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதி, தஞ்சை மாவட்டத்தில் உள்ள தங்களது குலதெய்வம் கோவிலில் இன்று வழிபாடு நடத்தினார்கள். அவர்களுக்கு தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரும், நடிகரும் தயாரிப்பாளருமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் சிறப்பான வரவேற்பு அளித்தார்.
தஞ்சை - கும்பகோணம் சாலையில் உள்ள மேல வழுத்தூர் கிராமத்தில் அமைந்திருக்கும் ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமட்சியம்மன் கோவில், நடிகை நயன்தாராவின் கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவனின் குலதெய்வமாகும். ஏற்கனவே, திருமணத்திற்கு முன்பு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இந்த கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார்கள்.
இந்த நிலையில், வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன், இன்று மீண்டும் குலதெய்வ கோவில் வழிபாடு நடத்தினார்கள். இவர்கள் வருகையால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பாதுகாப்பு பணியில் காவலர்கள் அமர்த்தப்பட்டார்கள்.
மேலும், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் ‘களவாணி 2’, ‘டேனி’, ‘க/ப ரணசிங்கம்’, ‘பட்டத்து அரசன்’ உள்ளிட்ட பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் சிறப்பான வரவேற்பு அளித்ததோடு, அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி கெளரவித்தார்.
நடிகர் துரை சுதாகரின் வரவேற்பால் உற்சாகமடைந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி அவருக்கு நன்றி தெரிவித்ததோடு, அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...