மது குடித்துவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் ஜெய் மீது சென்னை சைதாபேட்டை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால், அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம், என்று எதிர்ப்பார்க்கப்பட்டுகிறது.
கடந்த மாதம் சென்னை அடையாறு மேம்பாலம் அருகே, மது போதையில் கார் ஓட்டி நடிகர் ஜெய் விபத்து உண்டாக்கினார். இதில் அவருக்கோ மற்றவர்களுக்கோ காயம் ஏதும் ஏற்படவில்லை, என்றாலும் அவர் நிற்க கூட முடியாத அளவுக்கு அதிக மது போதையில் இருந்துள்ளார்.
அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், அவர் மீது குடி போதையில் அதிவேகமாக கார் ஓட்டியது, இன்சூரன்ஸ், ஆர்.சி. புக் போன்றவை இல்லாமல் காட்டியது உள்ளிட்ட பல கூற்றங்கங்களின் கிழ் வழக்குகள் பதிவு செய்ததோடு, கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கு சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஜெய், நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர் நேற்று நீதிமன்றத்த்ல் ஆழராகவில்லை இதையடுத்து, நீதிபதி ஆப்ரகாம் ஜெய்க்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளர். இதனால் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...
பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் ஆர்...