Latest News :

’யாத்திசை’ தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக இருக்கும் - விநியோகஸ்தர் சக்திவேலன் நம்பிக்கை
Tuesday April-11 2023

அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், புதுமுக நடிகர், நடிகைகள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘யாத்திசை’. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கு எதிராக போராடிய ஒரு சிறு தொல்கொடி சமூகத்தின் கதையாக உருவாகியுள்ள இப்படத்தை வீனஸ் இன்ஃபோடைன்மெண்ட் சார்பில் கே.ஜே.கணேஷ் தயாரித்துள்ளார்.

 

பல வெற்றி படங்களையும், தரமான படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு வரும் சக்தி ஃபிலிம் பேக்டரி பி.சக்திவேலன், ’யாத்திசை’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளார். வரும் ஏபரல் 21 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய படக்குழுவினர் படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை கூறி வியக்க வைத்தனர். குறிப்பாக, இப்படம் உருவான விதத்தை வீடியோவாக வெளியிட்டு மெய் சிலிரிக்க வைத்து விட்டார்கள்.

 

Yaathisai

 

நிகழ்ச்சியில் விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், “யாத்திசை சக்தி ஃபிலிம் பேக்டரிக்கான பெருமை. எங்கள் நிறுவனத்தில் நிறைய பெருமையான படைப்புகளை வெளியிட்டுள்ளோம் அந்த வகையில் இந்தப்படம் மிக முக்கியமானதாக இருக்கும். இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்துவிட்டே 30 பேருக்கு மேல் என்னை அழைத்துப் பேசினார்கள். எல்லோரையும் இந்தப்படம் சென்றடைந்துள்ளது என்பதே பெருமை. டிரெய்லரை விட இந்தப்படத்தில் இன்னும் பிரமாண்டம் இருக்கும். ஹாலிவுட் போர் படங்களில் கூட இல்லாத ஒரு அட்டகாசமான திரைக்கதை இந்தப்படத்தில் இருக்குறது. கண்டிப்பாக இது மிக முக்கியமான படமாக இருக்கும்.” என்றார்.

 

இயக்குநர் தரணி ராசேந்திரன் பேசுகையில், “தயாரிப்பாளரிடம் கதை சொன்ன போது உன்னிடம் உள்ள தவிப்பு பிடித்துள்ளது. உன் டீம் பற்றி சொல் என்றார். இந்தப்படத்தின் உயிர் என்னுடைய டீம் தான். எடிட்டர் மகேந்திரன், இசையமைப்பாளர் சக்ரவர்த்தி இருவரும் இல்லையென்றால் நான் இல்லை. எங்களை நம்பி ஒவ்வொருவராக உள்ளே வந்தார்கள். ஒரு ஷெட்யூல் முடித்து காட்ட சொன்னார்கள், அதன் பிறகே இந்தப்படம் உருவாவது உறுதியானது. 1300 வருடங்களுக்கு முந்தைய கதை என்பதால், அந்த காலகட்டம் அந்த மொழி வழக்கு அதையெல்லாம் உயிரோடு கொண்டு வருவது அத்தனை சவாலாக இருந்தது. அக்காலத்திய மொழியை எடுத்தால் இப்போது யாருக்கும் புரியாது என எல்லோரும் பயமுறுத்தினாலும் இதில் ஒரு கலை இருக்கிறது. சினிமா என்பது கலை, மக்கள் கொண்டாடுவார்கள் என்று தயாரிப்பாளர் தான் உறுதியாக நின்றார். அவருக்கு நன்றி. இப்படத்திற்கு முழு உயிர் தந்தது என் குழு தான். 25 உதவியாளர்கள் இப்படத்தில் வேலை செய்துள்ளார்கள். இந்தப்படத்தின் உயிர் எல்லோரையும் இழுத்து உடன் இணைந்து பயணிக்கிறது. இந்தப்படம் பொன்னியின் செல்வனுக்கு போட்டியல்ல ஆனால் யாத்திசை மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும். இந்திய சினிமாவில் மிகப்பெரிய படமாக இருக்கும் எனும் நம்பிக்கை உள்ளது. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

Yaathisai

 

தயாரிப்பாளர் கே ஜே கணேஷ் பேசுகையில், “எங்கள் குழுவை நம்பி மட்டுமே இந்தப்படத்தை எடுத்துள்ளோம். படத்தின் டிரெயல்ருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள், நன்றி.” என்றார்.

 

இசையமைப்பாளர் சக்ரவர்த்தி பேசுகையில், “முதலில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி. இது பீரியட் படம் என்பதால் இசையமைப்பது பெரும் சவாலாக இருந்தது.” என்றார்.

 

நடிகை சுபத்ரா பேசுகையில், “டிரெய்லருக்கு கிடைத்த ஆதரவுக்கு நன்றி. படத்திற்கும் அதே ஆதரவு தாருங்கள். படம் மிக நன்றாக வந்துள்ளது, படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள், நன்றி.” என்றார்.

 

Actress Subathra

 

நடிகர் விஜய் சேயோன் பேசுகையில், “யாத்திசையை கொண்டு சேர்க்க வேண்டியது உங்கள் கடமை. இது நம்முடைய பெருமைமிகு படைப்பு. எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இப்படத்தில் ஒவ்வொருவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். இப்படம் வெற்றிபெற ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

இப்படத்தின் டிரைலர் வெளியாகி 6 நாட்களில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருப்பதோடு, திரையுலக ஜாம்பவான்கள் பலரது கவனத்தையும் ஈர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Yaathisai Team


Related News

8925

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery