இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் டோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பி வரும் நிலையில், மறுபக்கம் டோனியும், அவருடைய மனைவி சாக்ஷி டோனியும் இணைந்து டோனி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கும் ‘எல்.ஜி.எம்’ என்ற தமிழ்ப் படத்தின் முதல் பார்வை போஸ்டரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இசையமைப்பாளரும், இயக்குநருமான ரமேஷ் தமிழ்மணி இயக்கும் இப்படத்தில் ஹரிஷ் கல்யான் நாயகனாகவும், ‘லவ் டுடே’ புகழ் இவானா நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வரும் இப்படம் பற்றி தயாரிப்பாளர் விகாஸ் ஹசிஜா பேசுகையில், “’எல். ஜி. எம்’ சிறப்பாக உருவாகி வருகிறது. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் பின்னணி வேலைகளைத் தொடங்கவிருக்கிறோம். தமிழ் திரையுலகில் எங்களின் சிறப்பான பயணம் தொடங்கி இருக்கிறது. மேலும் இது நல்ல அனுபவங்களையும் வழங்கி இருக்கிறது.” என்றார்.
படத்தின் படைப்புத்திறன் நிர்வாக தலைவரான பிரியன்சு சோப்ரா பேசுகையில், ”எல் ஜி எம் புதுமையான உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் பல ஆச்சரியமளிக்கும் விசயங்கள் இடம்பெற்றிருக்கிறது. திறமை வாய்ந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர்களின் முழுமையான பங்களிப்புடன் இந்த படைப்பு உருவாகி வருகிறது. நேர்த்தியாகவும், தோழமையுடனும் தயாராகி வரும் இதனை நாங்கள் மிகவும் ரசிக்கிறோம்.” என்றார்.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை கிரிக்கெட் வீரர் டோனி, தன்னுசை சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டார். வெளியான சில நிமிடங்களில் பல கோடி ரசிகர்களை கவர்ந்திருக்கும் போஸ்டர், தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...