நடிகர் தனுஷ் நடிகராக மட்டும் இன்றி வுண்டர் பார் பிலிம்ஸ் என்ற நிறுவனம் மூலம் பல தரமான படங்களை தயாரித்தும் வந்தார். சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறாத நிலையில், தயாரிப்பாளராக பெரும் நஷ்ட்டத்தை சந்தித்ததால் திரைப்படங்கள் தயாரிப்பதை நிறுத்திய தனுஷ், தற்போது மீண்டும் தயாரிப்பில் இறங்குகிறார்.
இந்த முறை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து திரைப்படம் தயாரிக்க உள்ள தனுஷ் அப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படத்தை தனது வுண்டர் பார் நிறுவனம் மூலம் தயாரிப்பதோடு, அதில் நாயகனாகவும் தனுஷ் நடிக்க உள்ளார்.
தேசிய விருது நாயகன் தனுஷ் மற்றும் தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி, ‘கர்ணன்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறார்கள்.
விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும் பாராட்டுக்களைக் குவித்து, வெற்றி பெற்ற ‘கர்ணன்’ திரைப்படத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வுண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனங்கள் இந்த புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
இந்தப் படத்தில், பல்வேறு பிராந்திய திரைப்படத் துறைகளைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றவுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...