இந்திய திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன், பல பிரமாண்டமான திரைப்படங்களை தயாரிப்பதோடு, வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் பலதரப்பட்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார்.
அந்த வகையில், அருள்நிதியின் வித்தியாசமான நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘திருவின் குரல்’ திரைப்படம் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் தலைப்பில் ’திருவின் குரல்’ எனக் குறிப்பிடுவது போல கதாநாயகனது கதாபாத்திரம் பேச்சு குறைபாடு இருப்பவராக (speech impairment) சித்தரிக்கப்பட்டுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான அழகான மற்றும் உணர்ச்சிபூர்வமான பிணைப்பை படம் கூற இருக்கிறது.
அருள்நிதி மகனாக நடிக்க, மூத்த இயக்குநரான பாரதிராஜா அவரது தந்தையாக நடிக்கிறார். ஆத்மிகா நாயகியாக நடிக்கிறார். சுபத்ரா ராபர்ட், மோனேகா சிவா, அஷ்ரப், ஜீவா, ஹரிஷ் சோமசுந்தரம், மகேந்திரன், முல்லையரிசி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. டிரைலர் வெளியான சில மணி நேரங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்ததோடு, படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாம் சிஎஸ் இசையமைக்க, சின்டோ போடுதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் ’திருவின் குரல்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் 42 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது. அருள்நிதியின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக உருவாகியிருக்கும் ‘திருவின் குரல்’ வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தை இயக்கியிருக்கும் ஹரிஷ் பிரபு, அருண்குமாரிடம் ’பண்ணையாரும் பத்மினியும்’, ’சேதுபதி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர், அதைத் தொடர்ந்து ’புரியாத புதிர்’ படத்தில் ரஞ்சித் ஜெயக்கொடியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...