அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ தீபாவளிக்கு பண்டிகைக்கு தான் வெளியாகிறது என்றாலும், அப்படம் வெளியாகும் ஏரியாக்களில் விஜய் ரசிகர்கள் கட்டும் தோரணம் மற்றும் பேனர்களால் அப்படம் தினமும் தீபாவளி கொண்டாடி வருகிறது.
பல்வேறு பெருமைகளோடு வெளியாக உள்ள ‘மெர்சல்’ படத்தை பார்க்க பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞரும், ‘விவேகம்’ படத்தில் அஜித்தின் நண்பர்களில் ஒருவராகவும் நடித்த செர்ஜ் குரோசான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
‘கேசினோ ராயல்’, ‘300 : ரைஸ் ஆப் ஆன் எம்பையர், ‘தி டிரான்ஸ்போர்டர் ரெபுல்டு’ உள்ளிட்ட பல ஹாலிவ்டு படங்களில் ஸ்டண்ட் கலைஞராக, சிறு சிறு வேடங்களிலும் செர்ஜ் குரோசா நடித்துள்ளார். இதற்கிடையே அஜித்தின் விவேகம் படத்தில் அஜித்தின் நான்கு நண்பர்களில் ஒருவராக நடித்துள்ள செர்ஜ், தமிழக மக்களிடம் நன்றாகவே பிரபலமடைந்துள்ளார்.
இந்த நிலையில், கபாலி, பாகுபலி படங்களை தொடர்ந்து ஐரோப்பாவின் மிக பெரிய திரையரங்கமான தி கிராண்ட் ரெக்ஸ் தியேட்டரில் மெர்சல் திரையிடப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை தொடர்ந்து தி கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கத்தில் மெர்சல் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திறையிடப்படுகிறது. இந்த சிறப்பு காட்சியில் ஐரோப்பிய தமிழர்கள் மட்டும் இன்றி, ஹாலிவுட் சினிமா கலைஞர்கள் பலரும் கலந்துக்கொள்ள இருக்க, ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் செர்ஜுக்கும் ‘மெர்சல்’ குழு அழைப்பு விடுத்துள்ளது.
அஜித்தின் ‘விவேகம்’ படத்தை ரிலிஸுக்கு முன்பாக புகழ்ந்தவர்களில் செர்ஜும் ஒருவர். ஆனால் அவர் அந்த படத்தில் நடித்திருந்ததால் அப்படி பேசியிருந்தால், அவர் நடிக்காத தமிழகத்தின் மற்றொரு உச்ச நடிகரான விஜயின் ‘மெர்சல்’ படத்தை பார்த்து என்ன சொல்லப் போகிறார், என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...
பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் ஆர்...