தமிழ் சினிமாவில் ஆக்ஷன் மற்றும் ஹாரர் படங்களின் வருகை அதிகரித்து வந்தாலும், குழந்தைகளுக்கான படங்களின் வருகை மிக குறைவாக இருப்பது தொடர்பாக ஜாம்பவான்கள் பலர் தங்களது மன குமுறல்களை அவ்வபோது தெரிவித்து வருகிறார்கள்.
பொதுவாக ஹாலிவுட்டில் மற்ற ஜானர் படங்களுக்கு நிகராக சிறுவர்களை மையப்படுத்திய மற்றும் அவர்களுக்கான படங்கள் அதிகம் வெளியாவது போல், தமிழ் சினிமாவில் அத்தகைய படங்கள் வெளியாக வேண்டும் என்றும் பலர் தங்களது விருப்பத்தை தெரிவித்து வரும் நிலையில், அவர்களின் விருப்பத்திற்கு கோலிவுட்டிலும் குட்டீஸ்களுக்கான திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது.
‘ரெட்டச்சுழி’, ‘சாட்டை’ போன்ற திரைப்படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்த யுவராஜா, ‘கெளுத்தி’ என்ற திரைப்படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அப்படம் திரைக்கு வர தயாராக இருக்கும் நிலையில், அடுத்ததாக குழந்தைகளின் வாழ்வியலை மையமாக வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார்.
கலர் காத்தாடி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ‘கே.கே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாடலை இம்மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இயக்குநர் யுவராஜா எழுத, ஜித்தின் கே.ரோஷன் இசையமைப்பில் விஜய் டிவி சூப்பர் சிங்கர் சாம்பியன் ரிஹானா மற்றும் சர்வேஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.
இந்த திரைப்படத்தில் பேபி சஞ்சனா மற்றும் மிதுன் ஈஸ்வர் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாக முக்கிய கதாபாத்திரங்களில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.
பாலா மற்றும் மயில் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சசிதக்ஷ்யா படத்தொகுப்பு செய்கிறார்.
உதயநிதி நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற “செவகாட்டு சீமையிலே” பாடலை பாடி, தெருக்கூத்து கலைஞராக நடித்த பின்னணி பாடகர் குரு, ‘கே.கே’ படத்தின் கிளைமாக்ஸ் பாடலை பாடியுள்ளார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...