‘விசிறி’, ‘வெண்நிலா வீடு’ என தரமான படங்களை கொடுத்த இயக்குநர் வெற்றிவீரன் மகாலிங்கம், தற்போது இயக்கம் தயாரிப்பு என்று மீண்டும் கோலிவுட்டில் பிஸியாகியுள்ளார்.
‘விடுதலை’ படம் மூலம் கதாநாயகன் அந்தஸ்து பெற்றிருக்கும் நடிகர் சூரி, பல படங்களின் கதையின் நாயகனாக ஒப்பந்தமாகி வரும் நிலையில், இயக்குநர் வெற்றிவீரன் மகாலிங்கம் கதை, திரைக்கதை எழுதியுள்ள படம் ஒன்றிலும் கதாநாயகனாக நடிக்கிறார். மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரமாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் வெற்றிவீரன் மகாலிங்கம் எழுதி இயக்கி, மகாலிங்கம் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஒரு படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.
ஒடிடி உலகில் புதிய பாதையை வகுத்து மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இணையத் தொடர்களின் டிரெண்ட் செட்டரான ‘அயலி’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘அருவி’ மதன் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ‘அயலி’ தொடரின் நாயகி அபி நட்சத்திரா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் காயத்ரி, செல்லா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றன.
மேலும், சமீபத்தில் வரலாற்று கதாபாத்திரங்களை முன்னிறுத்தி புகைப்படம் எடுத்து வைரல் ஆனது மட்டுமின்றி 'நாட் ரீச்சபிள்', 'மிடில்க்ளாஸ்' படங்களில் நடித்த சாய் ரோஹிணி, 'குக் வித் கோமாளி' புகழ், 'அருவி' பாலா, உதய்ராஜ், ஸ்ரீ பிரியா, கனிஷ், பேபி ஷிவானி, மாஸ்டர் ராஜூ மகாலிங்கம் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சஞ்சய் லோகநாத் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு வத்ஷன் இசையமைக்க, வடிவேல்-விமல்ராஜ் படத்தொகுப்பை மேற்கொள்கின்றனர். எஸ்.டி.சுரேஷ் இணை தயாரிப்பு மற்றும் தயாரிப்பு மேற்பார்வை பணிகளை மேற்கொள்கிறார்.
இணை இயக்குனர்கள் ரபீக் ராஜா மற்றும் மணிமூர்த்தி, நிர்வாக தயாரிப்பு ராபின் செல்வா, காஸ்டியூம் ரெங்கசாமி, மேக்கப் ரெங்கநாத பிரசாந்த், மக்கள் தொடர்பு வி.கே.சுந்தர், ஸ்டில்ஸ் வி.ஆர்.மணிகண்டன், டிசைனர் V STUDIOS BLESSON என வலுவான தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்ப்புத்தாண்டு அன்று பூஜையுடன் தொடங்கியது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...