தமிழ்நாடு திரைப்பட சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு திரைப்பட சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கையை ஏற்று 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள திரைப்படங்களுக்கு ரூ.7 லட்சம் மானியம் வழங்கப்படும். மேலும், ஒன்றரை கோடி ரூபாயில் திரைப்பட நகரம் சீர்ப்படுத்தப்படும் என்று அறிவித்து தயாரிப்பாளர்களின் வாழ்வை ஏற்றம் காண அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த இளைஞர் நலத்துறை & விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் மற்றும் செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கும் தமிழ்நாடு திரைப்பட சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மானியம் வழங்கப்படும் பெயர்கள் மற்றும் திரைப்பட பெயர்கள்:
1. எஸ் கியூப் பிக்சர்ஸ் - கடைசி காதல் கதை
2. ஜி மீடியா - பவுடர்
3. எல்லோ சினிமாஸ் - ஓங்காரம் (வேலனின்)
4. கிரேக்பிரைன் ப்ரோடுசன் - நாட் ரீச்சபிள்
மேலே குறிப்பிட்டுள்ள திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கி உதவிட வேண்டும் மற்றும் சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு மேலும் பல திட்டங்களை வழங்கிட மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மிக்க நன்றி நன்றி நன்றி.....!
இப்படிக்கு
தமிழ்நாடு திரைப்பட சிறுமுதலீட்டு தயாரிப்பாளர்கள் சங்கம்
தலைவர் : ஆர்.கே.அன்பழகன்
துணை தலைவர் : ஜி.மணிரத்தினம்
செயலாளர் : ஏ.தனலட்சுமி
துணை செயலாளர் : டி.சபாபதி
பொருளாளர் : டி.மோகன் குமார்
துணை பொருளாளர் : கே.சேகர்
கெளரவ ஆலோசகர் : துரை ராமச்சந்திரன்
சட்ட ஆலோசகர் : சி.நித்திஷ் சேகர்
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...