கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘டைடானிக்’ திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் ஹீரோ, ஹீரோயினாக நடித்த கேட் வின்ஸ்டெல் மற்றும் லியோனார்டோ டிகேப்ரியோ உலக அளவில் புகழ் பெற்றதோடு, பல விருதுகளையும் குவித்து வருகிறார்.
டைடானிக் படத்தை தொடர்ந்து ‘அவதார்’ என்ற மற்றொரு பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், அவதார் படத்தின் 2,3,4 மற்றும்5 வது பாகங்களை இயக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அவதார் இரண்டாம் பாகம், 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ‘அவதார் 3’ ரிலீஸ் செய்யப்படும் என்றும், 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி ‘அவதார் 4’ மற்றும் ‘அவதார் 5’ 2025 ஆம், ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தில் டைடானிக் ஹீரோயின் கேட் வின்ஸ்டெல் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இதன் மூலம் 20 ஆண்டுகள் கழித்து டைடானிக் ஹீரோயுனுடன் கேமரூன் மீண்டும் இணைந்துள்ளார்.
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...
பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் ஆர்...