Latest News :

மாணவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்! - ‘உதிர்’ படத்தை பாராட்டிய தணிக்கை குழுவினர்
Monday April-17 2023

ஜீசஸ் கிரேஷ் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘உதிர்’. சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘இது கதையல்ல நிஜம்’ படத்தில் நடித்த சந்தோஷ் சரவணன், விதுஷ் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருக்கும் இப்படத்தில் கதாநாயகியாக மனிஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் மனோ பாலா, சிங்கம் புலி, தேவதர்ஷினி, முத்துக்காளை, போண்டாமணி, குழந்தை நட்சத்திரம் ஜி.வி.சன்மதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

பள்ளி பருவத்தில் வரும் காதல் சரியா? தவறா? என்பதை மையமாக கொண்டு எழுதப்பட்டுள்ள இப்படத்தின் கதையில், காதலோடு பல்வேறு சமூக கருத்துகளும் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக காதலை தவறு என்று பார்ப்பவர்களுக்கு அது தவறாகவே தெரியும், அதே சமயம் அதை சரி என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு சரியாக தெரியும், என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா, பெற்றோர்களின் துணை இல்லாமல் காதலர்களால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது, என்பதை இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார்.

 

முக்கோண காதல் கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து அதை அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய ஜஞரஞ்சகமான படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா, மாணவர்களுக்கு மட்டும் இன்றி ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் அறிவுரை சொல்லும்படியான காட்சிகளை வடிவமைத்திருப்பதோடு, வாழ்க்கைக்கு எது தேவை, எது தேவையற்றது போன்ற பல நல்ல விஷயங்களை பாடமாக அல்லாமல் அனைவரும் கொண்டாடும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த படமாக கொடுத்திருக்கிறார்.

 

Uthir

 

இப்படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகர்கள் பலர் நடித்திருக்கிறார்கள். சுமார் 15-க்கும் மேற்பட்ட காமெடி நடிகர்களை நடிக்க வைத்திருக்கும் இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா, அவர்களை வெறும் காமெடி நடிகர்களாக மட்டும் இன்றி கதையில் முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரங்களாகவும் பயன்படுத்தியிருப்பது படத்தின் கூடுதல் சிறப்பு.

 

பள்ளி காலம், படிப்பு முடிந்த காலம் மற்றும் வேலைக்கு செல்லும் காலம் என்று மூன்று பருவங்களாக கதையை பிரித்து சொல்லியிருக்கும் இயக்குநர், ஒரு அழகான முக்கோண காதல் கதையை இளைஞர்கள் மட்டும் இன்றி பெற்றோர்களும் ரசிக்கும்படியான படமாக இயக்கியிருக்கிறார்.

 

இந்த நிலையில், படம் தணிக்கை குழுவினருக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், “பள்ளி மாணவர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு படமாக உதிர் உள்ளது. இப்படிப்பட்ட படங்கள் சமூகத்திற்கு மிகவும் அவசியம். நிச்சயம் படம் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் இருக்கிறது.” என்று பாராட்டி படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

 

மேலும், படத்தை பார்த்த சில சமூக ஆர்வலர்கள், “’உதிர்’ படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்” என்று கூறி இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜாவை பாராட்டியுள்ளார்கள். படம் வெளியாவதற்கு முன்பாகவே பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்களை பெற்று வரும் இயக்குநர் ஞான ஆரோக்கிய ராஜா தற்போது படத்தின் வெளியீட்டு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

 

மேலும், ‘உதிர்’ படத்தின் பாடல்களை கேட்ட உலக புகழ் பெற்ற உணவகமான ‘முருகன் இட்லி’ நிறுவனத்தார், ஒரு நல்ல படத்தில் தங்களது பங்கும் இருக்க வேண்டும் என்று விரும்பி, படத்தின் பாடல்களை உலகம் முழுவதும் ஒலிபரப்புவதற்கான பணிகளில் உதவி செய்வதாக சொல்லியிருக்கிறார்களாம்.

 

Director Gnana Arokiya Raja

 

”நமச்சிவாயா...நமச்சிவாயா...ஓம் நமச்சிவாய” பாடல் புகழ் அரவிந்த் ஸ்ரீராம் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள நான்கு பாடல்களும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. “வெல்லக்கட்டி” என்ற பாடலை சத்திய பிரகாஷ் பாடியிருக்கிறார். “சிறகு தொலைத்த பறவை’ என்ற பாடலை வைக்கம் விஜயலட்சுமியும், “கருவின் பிறந்த காதலை” பாடலை பவித்ராவும், “குடிடா குடிடா” என்ற பாடலை திப்புவும் பாடியுள்ளார்கள்.

 

மதுரை ஈஸ்வர் பின்னணி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜோ ஒளிப்பதிவு செய்ய, சார்ப் ஆனந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். ஓ.எஸ்.மணி இணை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். மக்கள் தொடர்பாளராக கோவிந்தராஜ் பணியாற்றுகிறார்.

Related News

8940

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery