’விலங்கு’, ‘அயலி’, ‘செங்களம்’ என்று புதுமையான அதே சமயம் மக்களுக்கு நெருக்கமான இணையத் தொடர்களை வெளியிட்டு தொடர் வெற்றி பெற்று வரும் ஜீ5 ஒடிடி தளம் தனது அடுத்த வெளியீடாக புதுமையான திரில்லர் இணையத் தொடரை அறிவித்துள்ளது.
‘ஒரு கோடை மர்டர் மிஸ்டரி’ (Oru Kodai Murder Mystery) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த திரில்லர் தொடர், பள்ளி மாணவர்களின் வாழ்க்கைப் பின்னணியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் படித்து வரும் கூச்ச சுபாவம் கொண்ட இளைஞன் வியோம், அவனுக்கு தன்னுடன் வினாடி வினா நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் தாரா மீது ஈர்ப்பு வருகிறது. அவனும் தாராவும் சந்திக்கத் திட்டமிட்டிருந்த நாளில் தாரா காணாமல் போகிறாள், அதைத்தொடர்ந்து, தாராவின் உடல் ஏரியில் கிடைக்கிறது. தாரா மரணத்தால் உடைந்து போகும் வியோம், தனது நண்பர்களின் உதவியுடன் தாராவிற்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க முயல்கிறான்.
நடிகை அபிராமி, ஆகாஷ், ஐஸ்வர்யா, ராகவ், ஜான், நம்ரிதா, அபிதா, பிராங்கின், சில்வன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள இத்தொடரை சொல் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடேட் (Sol Production Pvt.Ltd) நிறுவனம் சார்பில் ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ளனர். விஷால் வெங்கட் இயக்க, என்.பத்மகுமார் மற்றும் ரோஹித் நந்தகுமார் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளனர். பி.எம்.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்ய, சுதர்சன் எம்.குமார் இசையமைத்துள்ளார். மதிவதனன்.ஜெ படத்தொகுப்பு செய்துள்ளார்.
பள்ளி மாணவர்கள் துப்பறியும் ஒரு புதுமையான திரில்லராக, மலைநகர பின்னணியில் உருவாகியுள்ள இந்த இணையத் தொடர் பரபரப்பான திருப்பங்களுடன் விறுவிறுப்பான காட்சிகளுடன் உருவாகியுள்ள ‘ஒரு கோடை மர்டர் மிஸ்டரி’ தொடரின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் ஜீ5 தளத்தில் உலகம் முழுவதும் இத்தொடர் வெளியாகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...