‘விக்ரம்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்த காளிதாஸ் ஜெயராம், நடிப்பில் உருவாகும் படம் ‘அவள் பெயர் ரஜ்னி’. காளிதாஸ் ஜெயராம் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், நொடிக்கு நொடி திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கை நுனியில் உட்கார வைக்கும், துப்பறியும் வகை திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.
தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பரபரப்பான விசாரணை, அதன் பின்னால் அவிழும் பல முடிச்சுகள், காளிதாஸ் ஜெயராமின் அசத்தல் நடிப்பு என, ரசிகர்களின் ஆவலை அதிகரிக்கும் அட்டகாசமான திரில்லருக்கு உண்டான அனைத்து அம்சங்களும் நிறைந்துள்ளது.
நவரசா ஃபிலிம்ஸ் சார்பில் ஸ்ரீஜித்.கே.எஸ் மற்றும் பிளெஸ்ஸ்லி ஸ்ரீஜித் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் சென்னை பொள்ளாச்சி கொச்சின் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் தீவிரமான நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தின் டிரைலர் மற்றும் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவிக்க உள்ளது.
ஆர்.ஆர்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு 4 மியூசிக்ஸ் இசையமைக்க, தீபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். வின்செண்ட் வடக்கன், டேவிட் கே.ராஜன் வசனம் எழுத ஆஷிக்.எஸ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.ஆக்ஷன் நூர்,கே.கணேஷ் குமார், அஷரஃப் குருக்கள் ஆகியோர் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...