காமெடி நடிகராக மட்டும் இன்றி கதையின் நாயகனாகவும் தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் யோகி பாபு, மலையாளத் திரைப்படம் ஒன்றில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.
‘சன்னிதானம் PO' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை விவிகே என்டர்டெயின்மென்ட், சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் வி.விவேகானந்தன், மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
ராஜீவ் வைத்யா இயக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் நாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். இவர்களுடன் வேலராமமூர்த்தி, பிரமோத் ஷெட்டி, மேனகா சுரேஷ், வினோத் சாகர், வர்ஷா விஸ்வநாத், மித்ரா குரியன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் இதில் கன்னட நடிகர் அஸ்வின் ஹாசன் மற்றும் தமிழ் திரைப்பட குழந்தை நட்சத்திரம் ராக்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 15 நாட்களாக சபரிமலையில் நடைபெற்று வருகிறது . குறிப்பாக கடந்த சனிக்கிழமை முதல் யோகிபாபு நடிக்கும் காட்சிகள் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.
சபரிமலை சன்னிதானம், அங்கே பணிபுரியும் டோலி தூக்கும் பணியாளர்கள் மற்றும் சன்னிதானத்தில் அமைந்துள்ள தபால்த்துறை அலுவலகம் ஆகியவற்றை பின்னணியாக கொண்டு உருவாகும் இப்படத்தின் திரைக்கதையை ராஜேஷ் மோகன் எழுதுகிறார். வினோத் பாரதி.ஏ ஒளிப்பதிவு செய்கிறார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...