Latest News :

அஜித் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ‘அமராவதி’ தயாரிப்பாளர்!
Tuesday April-25 2023

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும் அஜித்குமார், நாயகனாக அறிமுகமான ‘அமராவதி’ படத்தை தயாரித்த சோழா கிரியேஷன்ஸ் நிறுவனம் தமிழ் கலை உலகின் தவிர்க்க முடியாத நிறுவனமாக திகழ்கிறது. பல வெற்றி படங்களை தயாரித்த இந்நிறுவனம், அஜித்தின் முதல் படமான ‘அமராவதி’ வெளியாகி 30 ஆண்டுகள் முடிவடைந்ததை கொண்டாடும் விதமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்  புத்தம் புதிய பொலிவுடன் மீண்டும் ‘அமராவதி’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளது.

 

இது குறித்து சோழா கிரியேஷன்ஸ் நிறுவனர் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம், அஜித்குமார் ரசிகர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் தொடங்கி, பின் தமிழ் திரைப்பட துறையில் மாபெரும் வெற்றிப்படங்களை உருவாக்கியதோடு, அகில உலக அளவில் திரைத்துறையில் அழியாப் புகழ்பெற்ற நடிகர் அஜித்குமாரை  ‘அமராவதி’ எனும் திரைக்காவியம் மூலம் அறிமுகப்படுத்தியது ‘சோழா கிரியேஷன்ஸ்’. அதன் நிறுவனர் சோழா பொன்னுரங்கம் 1993 ஆம் ஆண்டு சோழா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து, வெளியிட்ட அமராவதி திரைப்படம் வெளியாகி 30 வருடங்கள் ஆகிவிட்டது.

 

Amaravathy

 

அதை நினைவு கூர்ந்து கொண்டாடும் வகையில் வரும் 2023 மே 1' ஆம் தேதி நடிகர் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் ‘அமராவதி’ திரைப்படத்தை வெளியிடுகிறது ‘சோழா கிரியேஷன்ஸ்’ நிறுவனம்.

 

நவீன தொழில்நுட்ப முறையில் மாற்றம் செய்யப்பட்டு, ஒளி மற்றும் ஒலி ஆகியவை உயர் தொழில்நுட்ப வடிவில், புதிய பரிணாமத்தில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு ‘அமராவதி’ திரையிடப்படுகிறது.

 

தென்னிந்தியா முழுவதும் 400 திரையரங்குகளில் ‘அமராவதி’ திரைப்படத்தை வெளியிட ‘சோழா கிரியேஷன்ஸ்’ நிறுவனர் சோழா பொன்னுரங்கம் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். 

 

நடிகர் அஜித்குமாரின் கோடான கோடி ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், ஏற்பாடுகளை தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் செய்து வருகிறார்.

 

Amaravathy

 

அஜித்குமாரின் அன்பு ரசிகர்களும், திரை உலக கலைஞர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் இந்த ‘அமராவதி’ திரைப்படத்தின் மறு வெளியிட்டிற்கு ஒத்துழைக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

8959

’பிரேமலு’ மாதிரி ’2K லவ் ஸ்டோரி’ பெரிய கலக்சன் எடுக்கும் படமாக இருக்கும் - இயக்குநர் சுசீந்திரன் உறுதி
Thursday January-23 2025

சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...

விக்ரமின் ‘வீர தீர சூரன் - பாகம் 2’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Thursday January-23 2025

இயக்குநர்  எஸ் . யூ.  அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...

’ஆஃபிஸ்’ தொடரின் தலைப்பு பாடலை வெளியிட்ட டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்!
Thursday January-23 2025

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின்  டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...

Recent Gallery