சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜெயிக்கிறகுதிர’. இந்த படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்ஷிஅகர்வால், அஸ்வினி ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவைசரளா, ரவிமரியா, சிங்கம் புலி, சித்ராலட்சுமணன், லிவிங்ஸ்டன், ரமேஷ்கண்ணா, மதன் பாப் யோகி பாபு, படவா கோபி, டி.பி.கஜேந்திரன், பாண்டு, ஏ.எல்.அழகப்பன், ரோபோசங்கர், இமான் அண்ணாச்சி, தீபா, ராமானுஜம், வையாபுரி, பவர்ஸ்டார், ஆதவன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஆஞ்சி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கே.ஆர்.கவின்சிவா இசையமைத்துள்ளார். ரஞ்சித்குமார் எடிட்டிங் செய்ய, மணிகார்த்திக் கலையை நிர்மாணிக்கிறார். தளபதி தினேஷ் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, கூல் ஜெயந்த் நடனம் அமைக்கிறார். மக்கள் தொடர்பை மெளனம் ரவி கவனிக்க, எஸ்.எம்.சேகர் தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார். லியாகத் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்க டி.ஆர்.திரேஜா தயாரிக்கிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ஷக்தி என்.சிதம்பரம், படம் குறித்து கூறுகையில், “இந்த படம் சமீபத்தில் சென்சார் அதிகாரிகளால் பார்க்கப்பட்டு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது.
இன்று இளைய தலைமுறை ரசிகர்களுக்கு பிடித்த காமெடி, காதல், கொஞ்சம் கிளாமர் போன்ற அனைத்து அம்சங்களும் இருந்தால் தான் அவர்களிடம் படம் நல்ல வரவேற்பை பெரும்..அப்படி அனைத்து அம்சங்களும் உள்ள படம் தான் இந்த ஜெயிக்கிறகுதிர. படம் தொடக்கம் முதல் முடிவு வரை முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக இருக்கம். படம் விரைவில் வெளியாக உள்ளது.” என்றார்.
மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான டோவினோ தாமஸ், வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்...
கடந்த ஆண்டு வெளியான அனிமேஷன் திரைப்படமான ‘குண்டான் சட்டி’ படத்தை தயாரித்த டாக்டர்...
பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் ஆர்...