அறிமுக இயக்குநர் கே.என்.ஆர்.ராஜா இயக்கி தயரித்து கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘மாவீரன் பிள்ளை’. இதில் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநயாகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என தமிழகத்தில் எதிர்ப்புக்குரல் அதிகரித்து வரும் நிலையில், மதுவினால் ஏற்படும் அவலத்தை குறித்தும் மதுவிற்காக போராடி உயிர்நீத்த சமூக ஆர்வலர்கள் குறித்தும் ஒரு அருமையான விழிப்புணர்வு படமாக வெளியாகியுள்ள ‘மாவீரன் பிள்ளை’ படத்திற்கு தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் இந்த படத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் பார்த்துவிட்டு தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். அதிலும் கடந்த பல வருடங்களாக மதுவிலக்கு வேண்டும் என்று கேட்டு பல்வேறு தரப்பு போராட்டங்களை நடத்தி வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் இந்த படம் பற்றி கேள்விப்பட்டு படத்தை பார்த்தார்.
படம் பார்த்து முடித்ததும் மாவீரன் பிள்ளை படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்த ராமதாஸ், “மதுவிலக்கிற்காக தொடர்ந்து போராடும் ஒரே கட்சி நமது பாட்டாளி மக்கள் கட்சி தான்.. சமூக விழிப்புணர்வு கருத்துக்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இதுபோன்ற படங்கள் அதிகம் வெளியானால், குற்றங்கள் குறையும்.. தமிழகத்தில் மாற்றமும் மறுமலர்ச்சியும் ஏற்படும்” என்று பாராட்டியுள்ளார்.
அவரது இந்த பாராட்டை தொடர்ந்து மாவீரன் பிள்ளை படக்குழுவினர் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ளனர்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...