Latest News :

சரவெடியாக வெடிக்கும் உதய் கார்த்திக்! - கவனம் ஈர்க்கும் ‘டைனோசர்ஸ்’ டிரைலர்
Wednesday April-26 2023

நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்தில் இருந்து கோலிவுட்டில் நாயகனாக அறிமுகமாகியிருப்பவர் உதய் கார்த்திக். இவரது துடிப்பான நடிப்பில் உருவாகியுள்ள ‘டைனோசர்ஸ்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் மிஷ்கின், ரமணா, தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர்கள் விஜயகுமார், அருண் விஜய் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட ‘டைனோசர்ஸ்’ படத்தின் டிரைலர் சிறப்பு விருந்தினர்களை வியக்க வைத்ததோடு, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும், டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Dienosirs

 

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ் சம்மந்தம், “எங்களுக்காக எங்களை வாழ்த்த வந்த திரைப்பிரபலங்களுக்கு நன்றி. எப்போதுமே ஒரு புது டீம் என்னமாதிரி படம் தருவார்கள் என்று சந்தேகம் இருக்கும். ஆனால் எங்கள் படத்தின் மீது எங்களுக்கு மிகப்பெரும் நம்பிக்கை இருக்கிறது. இயக்குநர் ஹெச் வினோத் மூலம் தான் இந்தப்படத்தின் இயக்குநர் அறிமுகமானார். இயக்குநர் மிகத்திறமையானவர். இப்படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பல தடைகளைத் தாண்டியே இந்தப்படத்தைச் செய்துள்ளோம். படம் பார்க்கும் போது படத்தின் தரம் உங்களுக்குத் தெரியும். இன்று எங்களை வாழ்த்த இத்தனை ஜாம்பவான்கள் வந்திருப்பதே எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. படத்தைப்பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.

 

படத்தின் இயக்குநர் எம்.ஆர்.மாதவன் பேசுகையில், “சினிமா கண்டிப்பாக அனைவரையும் எட்டி உதைக்கும், நாம் தான் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். படம் வெற்றி பெறுவது எனக்கு முக்கியம் என்பதை விட படத்தில் பணி புரிந்துள்ள 100 பேருக்குத் தான் முக்கியம்,  இந்தப்படம் பல கதாநாயகர்களிடம் சென்றது ஆனால் கார்த்திக் இப்படத்தில் கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். பல நண்பர்களின் முயற்சியால் தான் நான் இங்கு வந்தேன், தயாரிப்பார் ஸ்ரீனி சார் என் தந்தை போன்றவர், நான் கேட்ட அனைத்தும் செய்து கொடுத்தார், நான் வாழ் நாள் வரை அவரை மறக்க மாட்டேன். 143 தயாரிப்பாளரை நான் அணுகியுள்ளேன் , ஆனால் இவர் தான் எனக்கு இந்த வாய்ப்பை அளித்தார். என்னை இந்த தயாரிப்பாரிடம் அழைத்துச் சென்றது இயக்குநர் எச்.வினோத் தான் அவருக்கு மிகவும் நன்றி.  கதாநாயகன் உதய் கார்த்திக் பெரிய நடிகர்களான அஜித், விஜய் போன்று நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இரவு பகல் பாராமல் பணி செய்துள்ளார். ரமணா சார் மிகவும் எளிமையானவர் அவரது எளிமை மிகவும் ஆச்சரியமாக உள்ளது. கதாநாயகி தமிழ் பேசும் நடிகையாகத் தான் இருக்க வேண்டும் என நினைத்தேன் அது போல அவர் அழகாக நடித்துள்ளார், ஸ்ரீனி நடிப்பு இந்த படத்தில் சிறப்பாகப் பேசப்படும். ஒளிப்பதிவாளர் என்னுடைய பாதி வேலையை அவரே செய்தார், இந்தப் படத்திற்கு இசையமைத்த போபோ சசி அதிக மெனக்கெடலுடன்  உழைத்துள்ளார். இசை அருமையாக வந்துள்ளது.  இயக்குநர் மிஷ்கின் சாருடன் இணைந்து பணி செய்ய நீண்ட நாட்களாக முயற்சி செய்தேன் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை, எனினும் இங்கு  அவர் வந்ததற்கு நன்றி. நடிகர் அருண் விஜய் சார் மற்றும் விஜய் குமார் சாருக்கு நன்றி. இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்குச் சிறந்த பொழுது போக்காக இருக்கும் நான் கலைப் படம் பண்ணவில்லை காலாய் படம் பண்ணியுள்ளேன். என் வளர்ச்சிக்கு முழுமுதல் காரணமாக இருக்கும் என் அம்மாவிற்கு நன்றி. கண்டிப்பாக இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கும், அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நாயகன் உதய் கார்த்திக் பேசுகையில், “முதலில் என் மாமா போனி கபூர் அவர்களுக்கு நன்றி, கோவிட் நேரங்களிலும் மூன்று படத்தை வெளியிட்டு பலரது வாழ்வில் வெளிச்சத்தை அளித்துள்ளார், அவருக்குப் பல பணிகள் உள்ளது இதற்கிடையில் எனக்காக இங்கு வந்ததற்கு நன்றி, இயக்குநர் மிஷ்கின் சார் நான் உங்களுடைய ரசிகன் அஞ்சாதே படம் முதல் இன்று வரை உங்களைப் பார்த்து வியந்து வருகிறேன் , அருண் விஜய் அண்ணா ஒரு ஹாலிவுட் நடிகர் தன்னை செதுக்குவது போல் செதுக்கியவர், இயக்குநர் ரமணா சாருக்கு நன்றி, இங்கு வந்துள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு இந்த தருணம் பெருமையாக உள்ளது. ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் சாருக்கு மிகப்பெரும் நன்றி. இந்தப்படம் உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் அனைவருக்கும் நன்றி.” என்றார். 

 

நடிகை சாய் ப்ரியா தேவா பேசுகையில், “மாதவன் சார் என்னிடம் கதை சொன்னதைவிட மிக அற்புதமாகப் படத்தை எடுத்துள்ளார். ஒவ்வொருவரும் மிகப்பெரும் உழைப்பைத் தந்துள்ளனர். எங்கள் குழுவினரின் உழைப்பு மிகப்பெரிய வெற்றியைத் தரும். அன்பை அனைவரிடமும் பகிருங்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “இந்தப்படம் பற்றி அனைவரும் மிகுந்த நம்பிக்கையோடு பேசுகிறார்கள். டிரெய்லர் நன்றாக உள்ளது படக்குழுவினரின் உழைப்பு தெரிகிறது. எனக்கு போனி கபூரைத் தெரியாது, ஆனால் ஸ்ரீதேவியைத் தெரியும். இந்த உலகில் வாழ்ந்த மிகச்சிறந்த நடிகைகளுள் ஒருவர் அவர். இன்று போனிகபூர் சாரை சந்தித்தது மகிழ்ச்சி. இயக்குநர் ரமணா அவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சி. இந்தக்குழு என்னை அழைத்த போது என்ன பெரிதாகச் செய்திருக்கப் போகிறார்கள் என்று நினைத்தேன் ஆனால் ஒரு குழுவாக அனைவரது உழைப்பும் துடிப்பும் தெரிகிறது. புதுமையாகச் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் புரிகிறது படம் மிகப்பெரிய வெற்றி பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் போனி கபூர் பேசுகையில், “இங்குப் பேசிய அனைவரும் படத்தைப் பற்றி நம்பிக்கையாகப் பேசினார்கள். இந்தக்குழு கோவிட் காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு இப்படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தை நான் பார்த்து விட்டேன் மிக அற்புதமாக இருந்தது. உதய் கார்த்திக் மிக நன்றாக நடித்துள்ளார். டான்ஸ் ஃபைட் ரொமான்ஸ் எல்லாம் நன்றாக வருகிறது. நன்றாக முத்தம் கொடுக்கிறார் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

Dienosirs

 

உதய் கார்த்திக் நாயகனாக நடிக்க, நாயகியாக சாய் ப்ரியா தேவா நடித்திருக்கிறார். இவர்களுடன் ரிஷி ரித்விக், ஸ்ரீனி, கவின் ஜெய்பாபு, டி.என்.அருண்பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

கேலக்ஸி பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீனிவாச சம்மந்தம் தயாரித்திருக்கும் இப்படத்தை எம்.ஆர்.மாதவன் இயக்கியிருக்கிறார். போபோ சசி இசையமைத்துள்ளார்.

 

விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘டைனோசர்ஸ்’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ராகுல் வெளியிடுகிறார்.

 

Related News

8961

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery