நடிகர் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், விஜய் உடனான அவரது திடீர் சந்திப்பு கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிக் ரசிச்சந்திரன் இயக்கத்தில், விஷால் நடித்து வரும் படம் ‘மார்க் ஆண்டனி’. மினி ஸ்டுடியோஸ் சார்பில் வினோத் தயாரிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று மாலை படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், நடிகர் விஷால் தனது ‘மார்க் ஆண்டனி’ படத்தின் டீசர் வெளியாவதற்கு முன்பாக அதை நடிகர் விஜய்க்கு காண்பிக்க விரும்பியுள்ளார். அவரது விருப்பம் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டதும் ஒடே ஓகே சொன்ன விஜய், விஷாலுடம் பட குழுவினரை அழைத்துள்ளார்.
அதன்படி, ’மார்க் ஆண்டனி’ டீசரை பார்த்து மகிழ்ந்த விஜய், படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டினார். அதற்கு விஷால் நன்றி தெரிவிக்க, “நண்பனுக்காக இதை செய்ய மாட்டேனா” என்று விஜய் கூறியது படக்குழுவினரை நெகிழ்ச்சியடைய செய்தது.
தளபதி விஜய் அவர்களுக்கு படக்குழுவினர்கள் பூங்கொத்து வழங்கினார்கள், புரட்சி தளபதி விஷால் அவர்கள் வழக்கம் போல் பூங்கொத்தை தவிர்த்து தளபதி விஜய் அவர்களின் பெயரில் அன்னை தெரசா முதியோர் இல்லத்தில் உணவு வழக்கியதற்கான ரசீதையும் அவரிடம் வழங்கினார்.
அதன் பின் தனது நீண்ட நாள் விருப்பமான திரைப்படம் இயக்கும் ஆசை ‘துப்பறிவாளன் 2’ மூலம் தொடங்கியுள்ளதாக நடிகர் விஜயிடம் கூறிய விஷால் அதன் பின் தொடர்ந்து திரைப்படங்களை கதைகளை இயக்க உள்ளதாகவும் தங்களுக்கும் இரண்டு கதை தயார் செய்துள்ளதாக நடிகர் விஜயிடம் நடிகர் விஷால் கூறிய போது ”நீ வா நண்பா நான் இருக்கிறேன் சேர்த்து பயணிப்போம்” என்று விஜய் கூறி மேலும் உற்சாகப்படுத்தினர்.
இச்சந்திப்பின் போது ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ‘மினி ஸ்டூடியோஸ்’ வினோத் குமார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ஒளிப்பதிவாளர் அபிநந்தன், நிர்வாக தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...