Latest News :

சித்தார்த்தின் ’டக்கர்’ அடல்டு படமா?! - இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷ் விளக்கம்
Sunday April-30 2023

ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் தயாரிப்பில், கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘டக்கர்’. இதில் நாயகியாக திவ்யான்ஷா நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, அபிமன்யு சிங், முனிஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், அருண் வைத்தியநாதன், விஸ்வா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, இளைஞர்களை வெகுவாக கவர்ந்ததை தொடர்ந்து, வெளியான சில நாட்களிலேயே சுமார் 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

 

வரும் மே 26 ஆம் தேதி உலகம் முழுவதும் ‘டக்கர்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷ் பத்திரிகையாளர்களிடம்  படம் பற்றி கூறுகையில், “படத்தின் நாயகன் சித்தார்த் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். நாயகி மிகப்பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். இருவரும் வெவ்வேறு சிந்தனை உடையவர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் இருவரும் ஒன்றாக பயணிக்க நேரிடுகிறது. அந்த பயணத்தில் என்ன நடந்தது, இவர்களுக்கிடையே காதல் வந்ததா?, காதலை இருவரும் எப்படி பார்க்கிறார்கள், என்பதை லவ் அண்ட் ஆக்‌ஷன் ஜானரில் முழுக்க முழுக்க கமர்ஷியலாக சொல்லியிருக்கிறேன்.” என்றார்.

 

படத்தின் டிரைலரில் சில காட்சிகளை பார்க்கும் போது கலாச்சாரத்தை மீறியது போல் இருக்கிறதே, இது அடல்டு படமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் கார்த்திக் ஜி.கிரிஷ், “பொதுவாக ஒரு கதாபாத்திரத்தை வைத்து தான் திரைக்கதை அமைக்கிறோம். அதுபோல தான் நாயகியின் கதாபாத்திரத்தை ரொம்ப போல்டானவராக வைத்திருக்கிறேன். அதேபோல், கிராமத்தில் இருந்து நாயகன் வருகிறார். இருவருக்கும் முரண்பாடான கருத்து வருகிறது. இப்படிப்பட்ட பெண்கள் சிட்டியில் சாதாரணமாக இருந்தாலும், கிராமத்தில் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், அது தான் இது. இப்படி ஒரு பொண்ணு, அப்படி ஒரு பையன், இவர்களுக்கு இடையே காதல் வந்தால் எப்படி இருக்கும் என்பது தான் திரைக்கதை. டிரைலரில் அந்த ஒரு காட்சி இருக்கிறது. ஆனால், அதன் பிறகு வரும் காட்சிகள் எல்லாமே அப்படி இருக்காது. அதனால், இது அடல்டு படம் அல்ல, அனைவரும் பார்க்க கூடிய படம் தான். தணிக்கை அதிகாரிகள் படம் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக சொன்னார்கள். படத்திற்கு யு/ஏ சான்றிதழ் தான் வழங்கியிருக்கிறார்கள். அதனால், நிச்சயம் இது அடல்டுக்கான படம் இல்லை. குடும்பத்துடன் பார்த்தால் கூட சிரித்துவிட்டு தான் வருவீர்கள்.” என்றார்.

 

சித்தார்த்தின் கதாபாத்திரம் பற்றி கூறிய இயக்குநர், “கோபமான இளைஞர் வேடத்தில் சித்தார்த் நடித்திருக்கிறார். அவரை சுற்றி தவறாக எந்த விஷயம் நடந்தாலும் அதை பார்த்து சட்டென்று கோபமடைந்துவிடுவார். நிஜத்திலும் அவர் அப்படி தான். சமூகத்தில் எதாவது தவறு நடந்தால் அதை எதிர்த்து குரல் கொடுப்பார், இந்த படத்திலும் அதுபோன்ற ஒரு வேடத்தில் தான் நடித்திருக்கிறார். அவரை கிராமத்து இளைஞராக, அதுவும் ஏழை வீட்டு இளைஞராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று சொல்கிறீர்கள். ஆனால், படத்தை பார்த்தால் அவரை அந்த கதாபாத்திரத்தில் ஏற்றுக்கொள்வீர்கள், அதற்கான சில காட்சிகளை வைத்திருக்கிறேன். அடுத்து ஒரு படமும் அவரை வைத்து இயக்கிக் கொண்டிருக்கிறேன்.” என்றார்.

 

Takkar

 

மேலும், படம் பற்றி கூறிய இயக்குநர், “காதல் மற்றும் பயணம் தொடர்பாக சில படங்கள் வந்திருந்தாலும், இந்த படத்தில் வெறும் காதல் மற்றும் பயணத்தை மட்டுமே மையப்படுத்தாமல், தத்துவமான விஷயங்கள் நிறைய பேசியிருக்கிறோம். டிரைலரில் கூட ஒரு வசனம் வரும், “பணம் இருந்தால் நிம்மதி போயிடும்” என்று ஹீரோயின் ஹீரோ கிட்ட சொல்வாங்க, ஆனால் ஹீரோ, இதெல்லாம் பணம் இருக்குறவங்க இல்லாதவங்க கிட்ட சொல்றது, என்று சொல்வார். இப்படி படம் முழுவதுமே நிறைய விஷயங்களை பேசியிருக்கிறோம். 

 

இந்த படத்தின் பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது, பெரிய அளவில் வரவேற்பும் பெற்றிருக்கிறது. இசைக்காக படம் நிச்சயம் பேசப்படும் என்று நான் நம்புகிறேன். இதில் இருக்கிற அனைத்து பாடல்களும் அனைவரின் பிளே லிஸ்டிலும் இருக்கிறது.

 

யோகி பாபு படம் முழுவதும் வருகிறார். அவர் பெரிய டானின் மகனாக வருகிறார். அந்த டானும் யோகி பாபு தான். தனது மகன் பெரிய டானாக வேண்டும் என்பதற்காக அப்பா யோகி பாபு அவரை வில்லனிடம் சேர்த்து விடுகிறார். அதனால் அவர் வில்லனுடன் பயணிப்பது போல் காட்சிகள் இருக்கும்.

 

’டக்கர்’ என்பது இந்தி வார்த்தை, மோதல் என்பது தான் அதன் அர்த்தம். டிரைலரில் இருக்கும் காட்சிகள் சில கேள்விகளை எழுப்பினாலும், படத்தில் தத்துவ ரீதியான விஷயங்கள் பேயிருந்தாலும், முழுமையான பொழுது போக்கு படமாக ‘டக்கர்’ இருக்கும்.” என்றார்.

 

இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா படம் பற்றி கூறுகையில், “இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது. இயக்குநர் கார்த்திக் என்னிடம் கதை சொல்லும் போதே இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்று தான் சொன்னார். படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது. அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கிறது. எனக்கு இந்த படம் ஒரு சவால் நிறைந்ததாக இருந்தது. இந்த படம் தான் என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் படமாகவும் இருந்தது. எல்ல இசையமைப்பாளர்களுக்கும் ஒரு நல்ல இயக்குநர் கிடைக்கும் போது தான், அவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள். அந்த வகையில், ‘டக்கர்’ படம் எனக்கு ஒரு கிப்ட் என்று தான் சொல்வேன், என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றிருக்கிறது.” என்றார். 

 

ஸ்ரீனிவாஸ் கவிநயம் கதை எழுதியுள்ளார் இப்படத்திற்கு வாஞ்சிநாதன் முருகேஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  ஜி.ஏ.கெளதம் படத்தொகுப்பு செய்ய, உதயகுமார்.கே கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். தினேஷ் காசி சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, சதிஷ் மற்றும் ஸ்ரீதர் நடனம் அமைத்துள்ளனர்.

Related News

8966

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery