’பத்து தல’ மற்றும் ‘ஆகஸ்ட் 16 1947’ என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் கெளதம் கார்த்திக், வில்லன் அவதாரம் எடுக்கிறார். ஆர்யா நாயகனாக நடிக்கும் ‘மிஸ்டர்.எக்ஸ்’ (Mr.X) படத்தில் கெளதம் கார்த்திக் வில்லனாக நடிக்கிறார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன்குமார் தயாரிக்கும் இப்படத்தை ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தை இயக்கிய மனு ஆனந்த் கதை எழுதி இயக்குகிறார். மிக பிரமாண்டமான ஆக்ஷன் திரைப்படமாக உருவாக உள்ள இப்படத்தின் சண்டைக்காட்சிகளின் படப்பிடிப்பு உகாண்டா, செர்பியா போன்ற நாடுகளில் நடைபெற்ற உள்ளது.
‘மரகத நாணயம்’, ‘பேச்சிலர்’, ‘கனா’, ‘நெஞ்சுக்கு நீதி’ போன்ற வெற்றி படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் இசையமைக்கும் இப்படத்திற்கு தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு செய்ய, ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். ஸ்டண்ட் சில்வா சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, இந்துலால் கவீத் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். ஏ.பி.பால்பாண்டி தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்க, உத்ரா மேனன் ஆடை வடிவமைப்பை கவனிக்கிறார்.
தற்போது இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி வைராகி வரும் நிலையில், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த முழு விபரத்தை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...