ஒலி பொறியாளராக கோலிவுட்டில் நுழைந்த விஜய் ஆண்டனி, தற்போது இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவராக வலம் வரும் நிலையில், ’பிச்சைக்காரன் 2’ படம் மூலம் இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.
இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்த நிலையில், விஜய் ஆனடனி ‘பிச்சைக்காரன் 2’ என்ற படத்தை இயக்கி நாயகனாக நடித்திருக்கிறார்.
படத்தின் தலைப்பு ‘பிச்சைக்காரன் 2’ என்றாலும் ‘பிச்சைக்காரன்’ படத்தின் கதைக்கும் இந்த படத்தின் கதைக்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லை. இரண்டு படங்களுக்கு இருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை இதிலும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது மட்டுமே. அதுமட்டும் இன்றி, பிச்சைக்காரன் படத்தில் அம்மா செண்டிமெண்ட் எப்படி ரசிகர்களை கவர்ந்ததோ அதுபோல் இந்த படத்தில் அண்ணன் - தங்கை செண்டிமெண்ட் ஹைலைட்டாக இருக்குமாம்.
விஜய் ஆண்டனி புரொடக்ஷன்ஸ் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக காவியா தபர் நடிக்கிறார். இவர்களுடன் ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், மன்சூர் அலிகான், ஹரிஷ் பெராடி, யோகி பாபு, ஜான் விஜய், தேவ் கில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
விஜய் ஆண்டனி, கே.பழனி, பால் ஆண்டனி ஆகியோர் இணைந்து எழுதியிருக்கும் கதைக்கு விஜய் ஆண்டனி திரைக்கதை அமைத்து இயக்கியிருப்பதோடு இசையமைத்து படத்தொகுப்பும் செய்துள்ளார். கே.பழனி வசனம் எழுத, ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அருண் பாரதி பாடல்கள் எழுத, ஆறுசாமி கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.
வரும் மே 19 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய் ஆண்டனி, ‘பிச்சைக்காரன் 2’ படம் பற்றி கூறுகையில், “முதல் முறையாக இயக்குநராக நிற்கிறேன். பல நேர்காணல்களில் படம் இயக்க விருப்பமிருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார்கள், அந்த மாதிரி எந்த திட்டமும் இருந்ததில்லை. நான் இயக்கியது ஒரு விபத்தாக நடந்தது தான். படம் மிக தரமானதாக வந்திருக்கிறது, அதற்கு காரணம் நான் மட்டும் அல்ல, இங்கு இருக்கும் தரமான தொழில்நுட்ப கலைஞர்களால் தான். என்னுடன் பணியாற்றியவர்க இன்று கூட தூங்காமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள், அதனால் தான் படம் மிக வலுவானதாக வந்திருக்கிறது.
ஐந்து மொழிகளில் படம் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நாளில் வெளியாகிறது. இந்தி மட்டும் மற்ற மொழிகளில் வெளியாகி ஐந்து நாட்களுக்குப் பிறகு வெளியாகும். படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படத்தின் நீளம் சரியாக 2.30 நிமிடங்கள். படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும்.
பொதுவாக ஹீரோக்கள் ஆக்ஷன் காட்சிகளை படமாக்கும் போது தான் விபத்தில் சிக்கி காயமடைவார்கள், ஆனால் நான் காதல் காட்சியில் நடித்த போது விபத்தில் சிக்கி காயமடைந்தேன். காதல் பாடலை படமாக்கும் போது தண்ணீரில் ஓட்டக்கூடிய ஜெட் ஸ்கி வண்டியை ஓட்டி சென்ற போது தான் விபத்து ஏற்பட்டது. அப்போது நான் தலையில் அடிபட்டு சுயநினைவின்றி நடுக்கடலில் விழுந்து விட்டேன், நாயகியும், உதவி ஒளிப்பதிவாளரும் தான் என்னை காப்பாற்றினார்கள், அவர்களுக்கு இந்த இடத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இது ‘பிச்சைக்காரன்’ படத்தின் தொடர்ச்சியல்ல, முழுக்க முழுக்க புதிய கதை. ஆனால், இதிலும் நான் பிச்சைக்காரன் வேடத்தில் தான் நடித்திருக்கிறேன். இந்த கதையை எழுதிய பிறகு நான் சசி சார் தான் இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அவரிடம் கதை சொன்ன போது அவருக்கும் கதை பிடித்துவிட்டது, இயக்கவும் ஓகே சொன்னார். ஆனால், வேறு ஒரு படத்தில் அவர் பிஸியாக இருந்ததால் இந்த படத்தை இயக்க முடியவில்லை. பிறகு வேறு சில இயக்குநர்கள் இயக்குவதாக இருந்து சில காரணங்களால் அது நடக்காமல் போனது. அதன் பிறகு தான் நான் இயக்கும் சூழ்நிலை உருவானது.
இந்த படத்தில் காதல் காட்சிகள் கொஞ்சம் தூக்கலாக இருக்கும், அதற்கு காரணம் நீங்கள் தான். காதல் காட்சிகளில் நான் அதிகம் நடிப்பதில்லை என்று கூறினீர்கள், அதனால் நான் பயிற்சி எடுத்துக்கொண்டு காதல் காட்சிகளில் தீவிரமாக நடித்திருக்கிறேன். அதனால் தான் படத்தின் காட்சிகள் கிளாமராகவும், கலர்புல்லாகவும் இருக்கிறது. நிச்சயம் படம் அனைவரும் பிடிக்கும். அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் இருக்கும்.” என்றார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...