Latest News :

பிச்சைக்காரன் படம் சசி சார் எனக்கு போட்ட பிச்சை! - விஜய் ஆண்டனி உருக்கம்
Tuesday May-16 2023

இயக்குநர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘பிச்சைக்காரன்’. தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் 100 நாட்கள் கடந்து இப்படம் ஓடியது. இதற்கிடையே ‘பிச்சைக்காரன் 2’ என்ற தலைப்பில் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பார்த்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து, இயக்கி, இசையமைத்து படத்தொகுப்பு செய்துள்ளார்.

 

’பிச்சைக்காரன்’ படத்திற்கும் இந்த படத்திற்கும் சம்மந்தம் இல்லை என்றாலும், இப்படத்திலும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் வேடத்தில் நடித்திருப்பதால் படத்திற்கு ‘பிச்சைக்காரன் 2’ என்று தலைப்பு வைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் டிரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.

 

வரும் மே 19 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ள ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய விளம்பர நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பாக்யராஜ், பாரதிராஜா, சசி, மோகன் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். மேலும், முதல் படத்திலேயே மக்களை திரும்பி பார்க்க வைத்த ’அயோத்தி’ பட இயக்குநர் மத்திரமூர்த்தி, ‘டாடா’ பட இயக்குநர் கணேஷ் கே.பாபு, ’யாத்திரை’ பட இயக்குநர் தரணி ராசேந்திரன் மற்றும் இயக்குநர் மோகன்.ஜி ஆகியோரை மேடை ஏற்றி, பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனி, “’பிச்சைக்காரன்’ திரைப்படம் சசி சார் எனக்கு போட்ட பிச்சை. முதல் பாகத்தில் எப்படி அம்மா-மகன் செண்டிமெண்ட் இருந்ததோ அதுபோல, இரண்டாவது பாகத்தில் அண்ணன்- தங்கை செண்டிமெண்ட்டை மையப்படுத்தி இருக்கும்.” என்றார். 

 

Pichaikkaran 2

 

தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி பேசுகையில், “வந்துள்ள அனைவருக்கும் வணக்கம்! இது எங்களுடைய படம். பொது மேடைகளில் எங்களுடைய படம் பற்றி பெரிதாக நான் பேச விருப்பப்பட மாட்டேன். பொங்கல் அன்று நான் வீட்டில் இருந்த பொழுது மலேசியாவில் இருந்து சாருடைய அசிஸ்டென்ட் எனக்கு கால் செய்து, 'சாருக்கு ஆக்சிடென்ட்! நினைவில்லாமல் தண்ணிக்குள் விழுந்துவிட்டார்' என்று சொல்லி போனை கட் செய்துவிட்டார். அந்த நேரத்தில் என்னால் வேறு என்ன யோசிக்க முடியும்? ஆனால், பத்திரிக்கை நண்பர்கள் உங்கள் அனைவருடைய பாசிட்டிவான எண்ணம் தான் அவரை மீண்டும் நல்லபடியாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. நல்ல பிரின்சிபல்களை கொண்டிருப்பவர் அவர். அவரை திருமணம் செய்து இருப்பதும் அவருடைய சினிமா கரியரில் அவருக்கு பக்கபலமாக இருப்பதும் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது” என்றார்.

 

கதாநாயகி காவ்யா தாப்பர் பேசியதாவது, “இங்கு வந்திருக்கும் ஊடக நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் ஹேமா கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த விஜய் ஆண்டனி- ஃபாத்திமாவுக்கு நன்றி. படத்தில் அனைவரும் சிறந்த பணியைக் கொடுத்துள்ளனர். படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்” என்றார்.

 

இயக்குநர் சசி பேசுகையில், ”’பிச்சைக்காரன்2’ படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இயக்குநராக அவதாரம் எடுத்திருப்பது வரவேற்க வேண்டிய முடிவு. ஏனென்றால், 'பிச்சைக்காரன்' கதையை விஜய் ஆண்டனிக்கு முன்பு நான்கைந்து ஹீரோக்களிடம் சொல்லி இருந்தேன். அவர்கள் எல்லாரும் இதை பிச்சைக்காரனின் கதையாகதான் பார்த்தார்கள். விஜய் ஆண்டனி மட்டும் தான் இதை பணக்காரனின் கதையாகப் பார்த்தார். இந்தப் படத்திற்காக சென்னை, பாண்டிச்சேரி என பல இடங்களில் இவர் பிச்சை எடுத்துள்ளார். பிச்சை எடுக்கும்போது என்ன மாதிரியான இசை வேண்டும் என அவர் கேட்ட போது எனக்கே குழம்பியது. அந்த இடத்தில் அவர் கேட்ட ஒரு கேள்விதான் முதல் 20 நிமிடத்திற்கான கதையை மாற்றியது. இசையமைப்பாளராக 'நூறு சாமிகள்' பாட்டையும் வெற்றிகரமாக தந்தார். நான் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என பல புது முகங்களை அறிமுகப்படுத்தி உள்ளேன். அதுபோல, புதுமுக இயக்குநராக விஜய் ஆண்டனியை வரவேற்பதிலும் மகிழ்ச்சி” என்றார். 

 

இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், "விஜய் ஆண்டனி ஒரு நல்ல இசையமைப்பாளர் தானே, எதற்கு நடிப்பெல்லாம் என்று யோசித்தேன். பின்பு 'பிச்சைக்காரன்' படம் பார்த்தேன். சிறப்பாக நடித்திருந்தார். கமர்ஷியலாக இந்தப் படத்தின் எல்லையும் அருமையாக இருந்தது. சசி திறமையான இயக்குநர். அவரது 'பூ' படம் பார்த்து மிரண்டு விட்டேன். கடவுள் விஜய் ஆண்டனிக்கு இரண்டாவது வாழ்க்கை கொடுத்திருப்பது ஃபாத்திமாவுக்காகவும் ரசிகர்களுக்குக்காவும்தான். இன்னும் நீ இருந்து செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. இயக்குநர்களுக்கு ரைட்டர்ஸ் மிக முக்கியம். என்னுடைய பல படங்கள் வெற்றி பெற ரைட்டர்கள் தான் காரணம். அதுபோல விஜய் ஆண்டனிக்கு சசி என்னும் ரைட்டர் இந்தப் படத்தில் கிடைத்திருக்கிறார். நீ கண்டிப்பாக ஜெயித்து விடுவாய்” என்றார். 

 

Vijay Antony and Kavya Thappa

 

இயக்குநர் பாக்யராஜ் பேசுகையில், “படத்தின் கதாநாயகிக்கு என்னுடைய முதல் வணக்கம். என்னுடைய குருநாதர் பாரதிராஜா இருக்கும் போது ஏன் அவருக்கு முதல் வணக்கம் என்றால், விஜய் ஆண்டனி கடலில் விழுந்த போது முதலில் குதித்து காப்பாற்றியவர் அவர் தான். அர்ஜூன் என்ற அசிஸ்டெண்ட் கேமரா பர்சனும் காப்பாற்றி இருக்கிறார். நான் முதலில் விஜய் ஆண்டனியை பார்த்தபோது அமைதியாக இருந்தார். பிறகு இசையமைப்பாளர், நடிகர், பாடலாசிரியர், இயக்குநர் என அவர் வளர்ந்து நிற்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.

 

மே 19 ஆம் தேதி உலக முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகும் ‘பிச்சைக்காரன் 2’ ஒரு வாரத்திற்குப் பிறகு இந்தி மொழியிலும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Related News

8988

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery