தரமான படங்களை கொடுத்தால் வெற்றி நிச்சயம் மட்டும் இன்றி ரசிகர்களும் நிச்சயம் திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பார்கள், என்ற நம்பிக்கையை மீண்டும் விதைத்திருக்கிறது ‘குட் நைட்’ திரைப்படம்.
அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவன்னக்கள் சார்பில் நாசரேத் பஸ்லியான், மகேஷ்ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் மணிகண்டன் நாயகனாகவும், மீதா ரகுநாத் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரமேஷ் திலக், ரேச்சல் ரெபாக்கா, கெளசல்யா நடராஜன், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கல்.
மே 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், படம் வெளியாகி ஒரு சில நாட்களில் இப்படத்திற்கான காட்சிகள் மற்றும் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டிருப்பதோடு, மக்கள் குடும்பத்தோடு இப்படத்தை பார்த்து வருகிறார்கள்.
இந்த மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக ‘குட் நைட்’ படக்குழுவினர் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பில் படத்தை வெளியிட்ட சக்தி பிலிம் பேக்டரி பி.சக்திவேலன் உள்ளிட்ட படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய விநியோகஸ்தர் சக்திவேலன், “தமிழ் திரையுலகத்திற்கு புதுமுக தயாரிப்பாளராக களம் இறங்கி, ‘குட் நைட்’ எனும் படத்தின் பணிகளை நிறைவு செய்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு முதலில் நன்றி. இப்படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து திரையரங்குகளில் வெளியிடுவதற்கான முதல் சந்திப்பு, தயாரிப்பாளர்களுடன் நடைபெற்றது. அந்த சந்திப்பிலேயே தயாரிப்பாளர்கள் துடிப்புடனும், உற்சாகத்துடனும் இருந்தனர்.
இன்றைய தேதியில் நிறைய தரமான படங்கள் தயாராகி வருகின்றன. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியாக உருவான திரைப்படங்கள், திரையரங்குகளில் வெளியாகி மக்களின் வரவேற்பை எப்படி பெறுகிறது? எவ்வளவு வசூல் செய்கிறது? என்பதனை நினைக்கும் போது அனைவருக்குள்ளும் ஒரு இனம் புரியாத பயம் வந்துவிடுகிறது. இது போன்ற சூழலில் தயாரிப்பாளர்களிடம் உங்களது படைப்பை முதலில் டிஜிட்டல் தள விற்பனையை நிறைவு செய்துவிட்டு, அதன் பிறகு திரையரங்க வெளியீடு குறித்து ஆலோசிப்போம் என வழிகாட்டுவேன். ஆனால் ‘குட்நைட்’ படக் குழுவினர் முதல் சந்திப்பிலேயே என்னிடம், ‘நாங்கள் மக்கள் கொண்டாட கூடிய படைப்பை உருவாக்கி இருக்கிறோம்’ என உறுதியாக தெரிவித்தனர். அவர்களின் அந்தப் பேச்சு, நம்பிக்கை, எண்ணம்.. அவர்களை வெற்றியை நோக்கி வழிநடத்தியது.
குட் நைட் படக் குழுவின் ஒட்டுமொத்த நம்பிக்கை, பட வெளியீட்டின் போதும் வெளிப்பட்டு ரசிகர்களிடம் சென்றடைந்தது. பொதுவாக வெற்றி என்பது கொண்டாட கூடியது தான். இந்தத் திரைப்படத்தின் வெற்றியை பன்மடங்கு கொண்டாட வேண்டும். தமிழ் திரையுலகத்திற்கும், தரமான படைப்பை உருவாக்குபவர்களுக்கும், நல்ல திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என காத்திருக்கும் என்னை போன்றவர்களுக்கும் குட் நைட் படக் குழு ஆகச் சிறந்த முன்னுதாரணம்.
தரமான.. மக்கள் ரசிக்கக்கூடிய படைப்பை வழங்கினால், அவர்கள் திரையரங்குகளுக்கு வருகை தந்து ரசித்து, திரைப்படத்தை வெற்றி பெற செய்வார்கள் என்ற எண்ணத்தை குட் நைட் படக் குழு மீண்டும் விதைத்திருக்கிறது.
பொதுவாக சில தரமான படங்களை மக்கள் ஓ டி டி எனப்படும் டிஜிட்டல் தளங்களில் தான் கண்டு ரசிப்பார்கள் என்ற எண்ணப்போக்கினை இந்த திரைப்படம் சிதறடித்திருக்கிறது. மெலோ ட்ராமா ஜானரில் தயாரான குட் நைட் திரைப்படம், வெளியான முதல் நாளில் என்ன தொகையை வசூலித்ததோ.. இரண்டாம் நாளில் அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக வசூலித்தது. மூன்றாவது நாளில் மும்மடங்கு அதிகமாக வசூலித்தது. இதற்கு சின்ன உதாரணம் சென்னையில் முதல் நாளன்று ஒரே ஒரு காட்சியுடன் மட்டுமே திரையிடப்பட்ட கமலா திரையரங்கில், இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில் 'குட் நைட்' திரைப்படத்திற்கு ஐந்து காட்சிகள் ஒதுக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் எந்த அளவிற்கு திரையரங்குகளில் வெற்றி பெற வேண்டும் என கணிக்கப்பட்டதோ.. அதை கடந்து மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள், நாயகனான மணிகண்டனை 'சின்ன விஜய் சேதுபதி' என கொண்டாடுகிறார்கள்.
இவற்றையெல்லாம் விட இப்படம் வெற்றி பெறும் என பத்திரிக்கையாளர்களும், ஊடகமும் முதலில் தெரிவித்து, இப்படத்தைப் பற்றிய நேர் நிலையான விமர்சனத்தை மக்களிடம் சேர்ப்பித்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இதற்காக ஊடகத்தினருக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
இயக்குநர் பாலாஜி சக்திவேல் பேசுகையில், “இயக்குநர் என்னை சந்தித்து முழு திரைக்கதையை வாசிக்க கொடுத்தார். தாளில் எழுதிய திரைக்கதையை வெண் திரையில் காட்சி மொழிகளாகவும், பின்னணி இசை ஊடாகவும், ரசிகர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையிலும், படத்தை உருவாக்குவது தான் கடினம். இதனை இயக்குநர் விநாயக் எளிதாக கையாண்டிருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான... திறமையான கலைஞர்களை தேர்வு செய்த விசயத்திலும் அவர் வெற்றி பெற்றிருக்கிறார். இதுபோன்ற நுட்பமான ஆளுமைகளை கொண்டிருக்கும் அறிமுக இயக்குநர் விநாயக்கை நான் மனதார வரவேற்கிறேன்.
குறட்டை எனும் விசயத்தை பொழுது போக்கு அம்சங்களுடன் சொல்ல இயலும் என இளைஞர் பட்டாளம் விவரித்த கதையை நம்பி முதலீடு செய்து தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாயகனான மணிகண்டன் மிக துல்லியமான நடிப்பை வழங்குபவர். படப்பிடிப்பு தளத்தில் அவரின் நடிப்பை கண்டு வியந்திருக்கிறேன். இந்தி திரை உலகில் நவாசுதீன் சித்திக் என்ற திறமையான கலைஞர் இருக்கிறார். அவரைப் போன்ற திறமையான நடிகர் தான் மணிகண்டன். இவரை கண்டுபிடித்து இப்படத்தில் முதன்மையான வேடத்தில் நடிக்க வைத்த இயக்குநர் விநாயக்கை வாழ்த்துகிறேன். பிரபலமான நடிகராகவும், நட்சத்திர மதிப்புள்ள நடிகராகவும் உயர்வதற்கான அனைத்து தகுதிகளும் மணிகண்டனிடம் இருக்கிறது. எதிர்காலத்தில் தமிழ் திரையுலகில் இன்னும் கூடுதலான உயரத்திற்கு செல்வார் என்பது என்னுடைய நம்பிக்கை.
படத்தில் பணியாற்றிய சக கலைஞர்கள், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், கலை இயக்குநர் இசையமைப்பாளர், பாடலாசிரியர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
நடிகர் ரமேஷ் திலக் பேசுகையில், ”இப்படத்திற்கு முதலில் விமர்சனம் செய்து மக்களிடம் குட் நைட் படத்தை பற்றிய அபிப்பிராயத்தை உருவாக்கியதற்காக பத்திரிக்கையாளர்களான உங்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இதனைத் தொடர்ந்து இப்படத்திற்காக தூங்காது தற்போது வரை அயராது உழைத்துக் கொண்டிருக்கும் உதவி இயக்குநர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளரை சந்தித்து, ஒரு முறை எங்களை எல்லாம் நம்பி படமெடுக்குறீர்களே... பயமில்லையா? என கேட்டேன். அதற்கு அவர்,‘ படத்தின் வெற்றி தோல்வியை கடந்து மனதிற்கு நிறைவை தரும் கதையை படமாக தயாரித்திருக்கிறேன். இந்த மகிழ்ச்சி எனக்கு படப்பிடிப்பு தளத்திலேயே கிடைத்திருக்கிறது’ என்றார். இதற்காக அவருக்கு பிரத்யேக நன்றியினை பதிவு செய்து கொள்கிறேன்.
இப்படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அறிமுகமான ‘வாய்மூடி பேசவும்’ என்ற படத்தில் நான் நடித்திருக்கிறேன். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய இசையமைப்பில் தயாரான இந்தப் படத்தில் நான் நடித்திருக்கிறேன். நாங்கள் கடுமையாக உழைத்து ஒரு காட்சியில் நடித்திருந்தாலும்.. அந்த காட்சியை பின்னணியிசை தான் மேம்படுத்தி, ரசிகர்களிடம் எங்களது திறமையை சேர்ப்பிக்கும்.
இயக்குநர் விநாயக் என்னுடைய மனதில் இருந்த சில விசயங்களை நுட்பமாக கண்காணித்து, எனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தை வழங்கினார். அவர் இதற்கு முன் ஒரு குறும்படத்திற்காக என்னை அணுகி கதை சொல்லி இருந்தார். அந்த கதை கேட்ட போது உண்மையிலேயே வியந்தேன். ஆனால் அது நிறைவேறவில்லை. அதற்கு பதிலாக அதைவிட வலிமையான கதாபாத்திரத்தை இப்படத்தில் வழங்கினார்.
பெண்கள் மட்டுமல்ல... ஆண்களும் அழலாம். அழுவதில் பாலின கட்டுப்பாடு இல்லை. படத்தில் மோகனின் அம்மா, மோகனின் மனைவியிடம் திருமணமான பிறகு ‘ஏதாவது விசேஷம் இல்லையா?’ என கேட்பார். அதற்கு நாயகி பதிலளிப்பது பொருத்தமாக இருந்தது. இந்த இடத்தில் இயக்குநர் விநாயக்கின் எழுத்து- சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்தது. ஏனெனில் என்னுடைய வாழ்க்கையிலும் இதனை கடந்திருக்கிறேன். இது போன்ற நல்ல வாய்ப்பை வழங்கிய இயக்குநர் உள்ளிட்ட படக் குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பஸ்லியான் பேசுகையில், ”இது எங்களுடைய எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம். தமிழில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் 2014-ம் ஆண்டில் இருந்தே இருக்கிறது. அந்த சூழலில் நான் வயதில் இளையவனாக இருந்ததால் தயாரிக்க முடியவில்லை. தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் என்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்தார். அவர் இந்தப் படத்தின் கதையை கூறி தயாரிக்க இயலுமா? எனக் கேட்டபோது, இணைந்து தயாரிக்கலாம் என சம்மதித்தேன்.
நல்ல எண்ணம்.. திறமையான கலைஞர்கள்... ஆகியோருடன் இணைந்து தரமான படைப்பை வழங்கினால் வெற்றி கிடைக்கும் என்பதை இப்படத்தின் மூலம் உணர்ந்து கொண்டிருக்கிறேன். மே பத்தாம் தேதியன்று இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நடைபெற்றது. அதன் பிறகு குட் நைட் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்தது. சமூக வலைதளங்கள் மூலமாக இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்தது. பொதுவாக சிறிய பட்ஜெட்டில் உருவான தரமான படைப்புகளை ஊடகங்கள் தான் நேர்மையாக விமர்சித்து, அதனை வெற்றி பெறச் செய்யும் என சொல்வார்கள். இதனை இந்த படத்தின் வெற்றியின் மூலம் நான் நேரடியாக கற்றுக் கொண்டேன்.
இப்படத்தில் மணிகண்டன் முதல் அனைத்து நடிகர் நடிகைகளும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களுடைய கடுமையான உழைப்பை வழங்கினர். ஒரு தரமான வெற்றி பெறக்கூடிய படைப்பு- தனக்கு தேவையான விசயத்தை தானே ஈர்த்துக் கொள்ளும் என்பார்கள். இது குட் நைட் படத்தில் சாத்தியமானது.
நான் சிறிய வயதிலிருந்து சினிமா ரசிகன்.. எங்கள் ஊரில் ‘ஜீன்ஸ்’ படம் வெளியான போது ‘ராஜேஷ் டிடிஎஸ்’ என நவீன ஒலி வடிவமைப்பு குறித்து விளம்பரப்படுத்தியிருப்பார்கள். இதனை காண்பதற்காக சைக்கிளில் ஆர்வத்துடன் அந்த திரையரங்கத்திற்கு சென்றிருக்கிறேன்.
முதலில் இந்தப் படத்திற்கு நானும் யுவராஜ் மட்டும் தயாரிக்க திட்டமிட்டிருந்தோம். ஒரு தருணத்தில் திரைப்பட தயாரிப்பு குறித்து என்னுடைய அம்மாவிடமும் விவாதித்தேன். அவர்களும் முழு விருப்பத்துடன் தந்தையிடம் எடுத்துக் கூறி, அவரின் சம்மதத்தையும் பெற்றார். அதன் பிறகு இப்படத்தின் கதையைக் கேட்டோம். அனைவருக்கும் பிடித்திருந்தால் அப்பாவும் இப்படத்திற்காக முதலீடு செய்தார். இதனால் படத் தயாரிப்பு பணிகள் எளிதானது.
நாங்களும், தயாரிப்பாளர் யுவராஜ் கணேசனுடன் இணைந்து தரமான படங்களை மட்டுமே வழங்குவோம் என உறுதி அளிக்கிறேன். கடந்த காலகட்டத்தில் ‘ஏவிஎம்’, ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’, ஏ. எம். ரத்தினம் போன்ற தயாரிப்பு நிறுவனங்களின் படைப்புகளுக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை போல் எங்களது நிறுவனங்கள் படைப்புகளுக்கும் விரைவில் கிடைக்கும் இதற்காக நாங்கள் உறுதியுடன் பணியாற்றுவோம் என தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
கிரியேட்டிவ் புரொடியூசர் எஸ். பி. சக்திவேல் பேசுகையில், ”இந்தப் படத்தின் தொடக்க நிலையிலிருந்து நான் தான் இடி தாங்கியாக பணியாற்றி வருகிறேன். டிசம்பர் 1, 2021 ஆம் ஆண்டில் யுவராஜ் என்னை தொடர்பு கொண்டு, ‘இப்படத்தின் கதையை கேளுங்கள். நன்றாக இருந்தால் இணைந்து பணியாற்றுவோம்’ என தெரிவித்தார். அதன் பிறகு ஸ்டுடியோ ஒன்றில் இயக்குநர் விநாயக்கிடம் இப்படத்தின் கதையை கேட்டேன். கதை கேட்கும்போது எப்போதும் எதிர்வினையாற்ற மாட்டேன். கதையை முழுவதுமாக கேட்டு முடித்த பிறகு, அடுத்த நாள் பதிலளிக்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். அதன் பிறகு அடுத்த நாள் இந்த கதை நிச்சயமாக வெற்றி பெறும் என்றேன்.
இப்படத்தில் யாரெல்லாம் நடிக்க வேண்டும் என்று பட்டியலை தயாரித்தோமோ.. அவர்கள் பெரும்பாலும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். முதலில் நாயகனாக மணிகண்டன் பெயரை எழுதி இருந்தோம். ரமேஷ் திலக் பெயரையும் எழுதி இருந்தோம். இவை எதுவும் மாறவில்லை. ஏனெனில் கதை மீது எனக்கு அளவற்ற நம்பிக்கை இருந்தது. அதன் பிறகு ஒரு வாரம் கழித்து நாயகன் மணிகண்டனை சந்தித்தோம். மணிகண்டன் இந்த படத்தில் பணியாற்றுவதற்கு நான்கு மாத கால அவகாசம் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு எதிலும் கவனம் செலுத்தாமல் இந்த படத்தின் மீது மட்டுமே நம்பிக்கையுடன் பயணித்தார்.
படத்தின் பணிகளை நிறைவு செய்து வெளியீட்டிற்காக எந்தவித தயக்கமும் இல்லாமல் சக்திவேலனை சந்தித்தோம். ஏனெனில் அவருடன் 'ஒ மை கடவுளே', 'பேச்சுலர்' ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிருக்கிறேன். அவருடைய உழைப்பும், அணுகுமுறையும் தெரியும். அவர் இந்தப் படத்திற்காக அணுகும் போது அவருடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வெற்றியை சத்தியமாக்கி இருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், ”குட் நைட் படத்தின் விமர்சனங்கள் அனைத்திலும் ஒரு நேர்மையும், உண்மைத் தன்மையும் இருந்தது. ஒரு படத்தை பற்றிய அபிப்பிராயம் தான் அப்படத்தின் வணிகத்தை பாதுகாக்கும். திரைப்படத்தைப் பற்றி படக் குழுவினர் என்னதான் உயர்வாக எடுத்துக் கூறினாலும், அதனை ஊடகங்கள் உறுதிப்படுத்தினால் தான் கவனம் பெறும். இதற்கு நட்சத்திர நடிகர்களும் விதிவிலக்கல்ல. திரைத்துறை கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் ஆரோக்கியமாக இயங்குகிறது என்றால் அது ஊடகங்களின் ஆதரவினால் தான். இதற்காக ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் பணியாற்றிய ‘ஜோக்கர்’ படத்தைப் பற்றிய ஊடகங்களின் விமர்சனங்கள் தான், அதனை சரியான உயரத்திற்கு எடுத்துச் சென்றது. இ
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...