விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தை இயக்கி தயாரித்த பி.ஆறுமுக குமார், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘லாபம்’ படத்தை தயாரித்தார். இந்த இரண்டு படங்களும் விஜய் சேதுபதியின் சினிமா பயணத்தில் முக்கியமான படங்களாக அமைந்த நிலையில், தற்போது மீண்டும் ஆறுமுக குமாருடன் விஜய் சேதுபதி கைகோர்த்துள்ளார்.
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் துவக்க விழா மலேசியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஈப்போ என்ற மாநகரில் சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்தத் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆர்.கோவிந்தராஜ் கவனிக்க, கலை இயக்கத்தை ஏ.கே. முத்து மேற்கொள்கிறார். அதிரடியான சண்டை காட்சிகளை தினேஷ்குமார் சுப்பராயன் அமைக்கிறார்.
ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை 7 C’ஸ் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. ஆறுமுக குமார் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...