Latest News :

பிரபல நடிகைக்கு தந்தையான விஜய் மல்லையா!
Saturday October-07 2017

பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கி கடன் வாங்கி, அதை திரும்ப செலுத்த முடியாமல் தற்போது லண்டனில் தலைமறைக உள்ள பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா, பிரபல நடிகை சமீரா ரெட்டியின் தந்தை என்ற பரபரப்பு தகவல் பரவி வருகிறது.

 

‘வாரணம் ஆயிரம்’, படம் மூலம் தமிழ் சினிமாவி ஹீரோயினாக அறிமுகமான சமீரா ரெட்டி, தொடர்ந்து ‘வேட்டை’, ‘நடுநிசி நாய்கள்’, ‘வெடி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிறகு போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்‌ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்துக்கொண்டவர் நடிப்புக்கு முழுக்கு போட்டார். தற்போது சமீராவுக்கு ஒரு குழந்தை உள்ளது.

 

இந்த நிலையில், சமீரா ரெட்டியின் திருமணத்தின் போது, விஜய் மல்லையா தந்தை ஸ்தானத்தில் இருந்து அவருக்கு கன்னியாதானம் சம்பிராயத்தை செய்து வைத்த தகவல் வெளியாகியுள்ளது. இதனால் உறவு முறையில் விஜய் மல்லையா சமீரா ரெட்டிக்கு தந்தை முறை, என்று செய்திகள் பரவி வருகிறது.

 

இது குறித்து விசாரிக்கையில், விஜய் மல்லையா சமீரா ரெட்டியின் நெருங்கிய உறவினர் என்றும், அதனால் தான் அவரது திருமணத்தில் கன்னியாதானம் சம்பிராத்தை அவர் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

 

இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள விஜய் மல்லையா குறித்து தினம் தினம் புது தகவல்கள் வெளியாக, தற்போது வெளியாகியுள்ள சமீரா ரெட்டியின் விவகாரமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தின் மூலம் மீண்டும் சமீரா ரெட்டி பிரபலமாகி வருவதாகவும், அவரை சில இயக்குநர்கள் அனுகி நடிக்க அழைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Related News

900

”அப்பாவுக்கு கொடுத்த இடத்தை உங்களுக்கும் தருவார்கள்” - ஆகாஷுக்கு நம்பிக்கை அளித்த சிவகார்த்திகேயன்
Saturday January-04 2025

எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...

பிரபலங்கள் வெளியிட்ட ‘உசுரே’ படத்தின் முதல் பார்வை போஸ்டர்!
Thursday January-02 2025

ஸ்ரீ கிருஷ்ண புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...

கவனம் ஈர்க்கும் ‘எமகாதகி’ முதல் பார்வை போஸ்டர்!
Wednesday January-01 2025

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...

Recent Gallery