Latest News :

மோஷன் போஸ்டர் மூலம் வெளியான ‘தி இந்தியா ஹவுஸ்’ பட அறிவிப்பு
Monday May-29 2023

குளோபல் ஸ்டார்  நடிகர் ராம் சரண், 'வி மெகா பிக்சர்ஸ்' என்ற தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் திரையுலகில் தனது அடுத்த பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளார்.  தனது நண்பரான விக்ரம் ரெட்டியின் UV கிரியேஷன்ஷுடன் இணைந்து ரசிகர்களுக்கு தனித்துவமான கதைகளை அளிப்பதுவும்,  அதே வேளையில், திரையுலகில் புதிய திறமைகளை உருவாக்குவது மற்றும் ஊக்குவிப்பதுவே இந்நிறுவனத்தின் நோக்கம் ஆகும். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் என்பது தி காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 போன்ற ப்ளாக்பஸ்டர் படைப்புகளை வழங்கிய  தனித்துவமான தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனங்கள் இணைந்து தங்களது முதல் பிரமாண்ட படைப்பை அதிரடியாக அறிவித்துள்ளனர்

 

'வி மெகா பிக்சர்ஸ்' மற்றும் 'அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்' ஆகிய நிறுவனங்கள்  தங்களது முதல் திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தை இணைந்து  வழங்குவதில் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த கூட்டணியின் இந்த முதல் முயற்சியில், திறமையான நடிகர்கள் மற்றும் திறமையான  தொழில் நுட்ப குழுவினருடன் ஒரு சிறந்த நட்சத்திரக் குழுவாக இப்படம் இருக்கும் என ரசிகர்களிடம் உத்தரவாதம் அளிக்கும்  வகையில்,  இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராம் வம்சி கிருஷ்ணா  இயக்குவதாக அறிவித்துள்ளனர், மேலும் டைனமிக் ஹீரோ நிகில் சித்தார்த்தா மற்றும் மூத்த நடிகர் அனுபம் கெர் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். 

 

அனைவராலும் போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த அறிவிப்பு, குளோபல் ஸ்டார் ராம் சரண் அவர்களின் வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் ஆகியவற்றின் சமூக ஊடக கணக்குகள் வழியாக அழகான வீடியோவுடன் வெளியிடப்பட்டுள்ளது. 

 

இந்திய பார்வையாளர்களை மீண்டும் ஒரு பெரும் சகாப்தத்திற்கு அழைத்துச் சென்று அவர்களின் இதயத்தைத் தொடும் அளவிற்கு ஒரு அனுபவத்தை இப்படம் வழங்கும்.  லண்டனில் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டீசர் படத்தின் களத்தை சொல்வதாக அமைந்துள்ளது. தி இந்தியா ஹவுஸைச் சுற்றி அரசியல் கொந்தளிப்பு நிலவும் சூழலில்,  ஒரு காதல் கதையை இப்படம்  சொல்கிறது. எரியும் இந்தியா ஹவுஸின் பிரமாண்ட காட்சியுடன் இந்த டீசர் முடிவடைகிறது. 

 

The Indian House Poster

 

வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இடையேயான கூட்டணி இந்திய திரையுலகில் மிக சக்திவாய்ந்த கூட்டணியின் துவக்கத்தை குறிக்கிறது.

 

குளோபல் ஸ்டாராக அறியப்படும் ராம் சரண் தேசத்தை பெருமைப்படுத்தி மற்றும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கம் கொண்ட சினிமாவை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையுடன்  சிறந்த தயாரிப்பாளராக இருப்பார் என்று அபிஷேக் அகர்வால் பாராட்டியுள்ளார்.

 

இந்திய சினிமாவை மட்டுமின்றி உலகையே அதிர வைக்கும் இந்த அற்புதமான திரைப்படம்  குறித்த கூடுதல் அறிவிப்புகளுக்கு  அனைவரும் காத்திருக்கவும். விரைவில் ஒவ்வொன்றாக அதிகாரப்பூர்வமாக அவை வெளியாகும்.

Related News

9008

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery