உலக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் ஃபோர்டு நடிப்பில் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘இண்டியானா ஜோன்ஸ்’. 1981 ஆம் ஆண்டு இதன் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், 1984, 1989 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி அனைத்தும் ரசிகர்களின் பேவரைட் சாகச திரைப்படங்களாக அமைந்தன.
இதற்கிடையே, இண்டியான ஜோன்ஸ் திரைப்படத்தின் ஐந்தாவது பாகமான ‘இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ திரைப்படம் வரும் ஜூன் 30 ஆம் தேதி அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வெளியாக உள்ளது. தற்போது இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், ‘இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ திரைப்படம் அமெரிக்காவில் வெளியாவதற்கு ஒருநாள் முன்பே இந்தியாவில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. ஆம், இந்தியாவில் ‘இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி’ திரைப்படம் ஜூன் 29 ஆம் தேதி வெளியாக உள்ளது.
ஹாரிசன் ஃபோர்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளராகத் திரும்புவதால் மீண்டும் ஒரு மிகப்பெரிய சாகச பயணத்தை பார்ப்பதற்காக உலக ரசிகர்கள் தயராகி கொண்டிருக்கிறார்கள். அதிலும், இந்தியாவில் முன்னதாகவே இந்த படம் வெளியாவது இந்திய ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாரிசன் ஃபோர்டுடன் ஃபோப் வாலர்-பிரிட்ஜ், அன்டோனியோ பண்டேராஸ், ஜான் ரைஸ்-டேவிஸ், டோபி ஜோன்ஸ், பாய்ட் ஹோல்ப்ரூக் மற்றும் மேட்ஸ் மிக்கெல்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜேம்ஸ் மான்கோல்ட் இயக்கிய இப்படத்தை கேத்லீன் கென்னடி, ஃபிராங்க் மார்ஷல் மற்றும் சைமன் இமானுவேல் ஆகியோர் தயாரித்துள்ளனர், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் ஜார்ஜ் லூகாஸ் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...