ஏ சான்றிதழ் பெற்று, அப்படிப்பட்ட படமோ...இப்படிபட்ட படமோ....என்று பல சர்சைகளை எழுப்பியும் ‘ஹர ஹர மஹாதேவகி’ வியாபார ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இளசுகள் திரும்பி திரும்பி படத்தை பார்த்து மகிழ்ந்ததோடு, “படம்னா இப்படி தான் ஜாலியாக இருக்கனும்” என்று கமெண்ட் கொடுத்தார்கள்.
படத்தின் ரிலிஸுற்கு முன்பாகவே, இப்படி தான் படம் இருக்கும், இப்படிபட்ட ரசிகர்களை டார்கெட் பண்ணி தான் இந்த படம் எடுத்திருக்கிறேன், என்று இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமாரின் ஓபன் ஸ்டேட்மெண்டுக்கு கிடைத்த வெற்றியாக படம் வசூலை அல்லு அல்லு என்று அல்லிக்கொண்டிருக்கிறது.
’ஹர ஹர மஹாதேவகி’ பட ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே தனது அடுத்தப் படமன ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற தலைப்பை வெளியிட்டு இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார், தமிழ் சினிமாவுக்கு புதிய டிரெண்டை அறிமுகப்படுத்தியுள்ளார். இனி தொடர்ந்து இதுபோன்ற பல படங்கள் வருவதற்கான சூழல் கோடம்பாக்கத்தில் தென்படுகின்றது.
இந்த நிலையில், ‘ஹர ஹர மஹாதேவகி’ கூட்டணியின் அடுத்த படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் பூஜையை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இன்று நடத்தியதோடு, ”அடுத்த பஜனைக்கு இன்று பூஜை” என்ற வாக்கியத்தோடு பட விளம்பரத்தை வெளியிட்டு, படத்தின் மீது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடிகும் இப்படத்தில் ஓவியா ஹீரோயினாக நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...