Latest News :

எதிர்பார்ப்புடன் தொடங்கிய ‘தேஜாவு’ பட இயக்குநரின் புதிய படம்!
Friday June-09 2023

பத்திரிகையாளராக இருந்து இயக்குநராக வெற்றி பெற்ற அரவிந்த் ஸ்ரீநிவாசனின் முதல் திரைப்படமான ‘தேஜாவு’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக திரைக்கதை மூலம் ரசிகர்களை கட்டிப்போடும் திறமை படைத்தவர்கள் வெற்றி பெறுவது எளிது. அப்படி ஒரு இயக்குநராக கவனம் ஈர்த்த இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசனின் அடுத்த படம் என்னவாக இருக்கும், என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருடைய அடுத்த படம் பூஜையுடன் சமீபத்தில் தொடங்கியது.

 

‘தருணம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ழென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் தயாரிக்க, கிஷன் நாயகனாகவும், ஸ்மிருதி நாயகியாகவும் நடிக்கிறார்கள். இப்படத்தின் துவக்க சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன், “எங்கள் படத்திற்காக வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. புகழ் 18 வருடங்களாக நெருங்கிய நண்பர். பல காலம் நாங்கள் படம் செய்யப் பேசிக்கொண்டிருந்தோம், எனக்காக என்னை நம்பி எல்லாம் செய்வார். அவருக்கு இது வெற்றிப்படமாக அமையும். கிஷன், ஸ்மிருதி வெங்கட் புதுசான இளமையான ஜோடி, தர்புகா சிவா இசையமைக்கிறார். அவரிடம் நான்கு ஹிட் பாடல்கள் கேட்டிருக்கிறேன். கண்டிப்பாக பண்ணிடலாம் என்றார். என் தேஜாவு பட எடிட்டர் இந்தப்படத்திலும் பணியாற்றுகிறார். தேஜாவுவை தாண்டி ஒரு நல்ல படைப்பைத் தர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் நன்றி. தேஜாவு படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு நல்ல மிஸ்டரி திரில்லர் பண்ணக்கூடாது என்பதில் நிச்சயமாக இருந்தேன். பல கதைகள் பேசினோம். இந்தக்கதைக்காக 2 மாதங்கள் எடுத்துக் கொண்டேன். தயாரிப்பாளர் புகழ் என்னை எதுவுமே கேட்கவில்லை. மிக ஆதரவாக இருந்தார். இது கண்டிப்பாக அனைவருக்கும் மைல்கல் படமாக இருக்கும்.” என்றார்.

 

தயாரிப்பாளர் புகழ் பேசுகையில், “அரவிந்த் ஶ்ரீநிவாசனுடன் என் நட்பு 18 வருடங்களுக்கு மேலானது. ஒரு நல்ல படைப்பைத் தரவே நாங்கள் உழைக்கிறோம். அரவிந்த் ஶ்ரீநிவாசன்  என் நண்பர் என்பதால் எனக்காக இன்னும் கடினமாக உழைக்கிறார். அவர் மணிரத்னம், கௌதம் மாதிரி படம் பண்ண வேண்டும் என்று சொல்வார். இந்தப்படம் அந்த கனவை நனவாக்கும். மிக நல்ல படக்குழு எங்களுக்கு அமைந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார். 

 

நடிகர் கிஷன் தாஸ் பேசுகையில், “நான் இன்னும் புதுமுகம் தான். இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் கதை சொல்லும்போதே முதலிலிருந்தே இந்தப்படத்தைப் பெரிய படமாக ட்ரீட் செய்யலாம் என்றார். இப்போதே மோஷன் போஸ்டர், புரமோ வீடியோவுடன் ஆரம்பித்துள்ளோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் திரைத்துறையில் இருப்பதற்குக் காரணமே தர்புகா சிவாதான், அவருக்கு என் நன்றி. அவர் இந்தப்படத்திற்கு இசையமைப்பது மகிழ்ச்சி. கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையும்.” என்றார்.

 

நடிகை ஸ்மிருதி வெங்கட் பேசுகையில், “எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுக்கு நன்றி. இந்தப்படத்தில் இதுவரை செய்யாத கதாப்பாத்திரம். முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இந்தப்படம் பெரிய வெற்றிபெறும் என நம்புகிறேன் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

திரு அருண் பாலாஜி  பேசுகையில், “அரவிந்த் ஶ்ரீநிவாசன் என்னுடைய நெருங்கிய நண்பர். இன்றைய இயக்குநர்களில் மிகத்திறமையான இளம் இயக்குநர். தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குநர். நல்ல படத்தை தருவார். இந்த திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்.” என்றார்.

 

தயாரிப்பாளர் விஜய் பாண்டி பேசுகையில், “இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் எப்போதும் செலவு வைக்க மாட்டார். தயாரிப்பாளருக்கான இயக்குநர். இந்தப்படத்தைக் கண்டிப்பாகச் சிக்கனமான பட்ஜெட்டில் நல்ல படைப்பாக எடுப்பார். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார். 

 

தயாரிப்பாளர் டில்லிபாபு பேசுகையில், “ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. அரவிந்த் ஶ்ரீநிவாசன் முதல் படமே மிக நன்றாக இயக்கியிருந்தார். மிகப்பெரிய இடத்திற்கு செல்வார். நிறைய புது தயாரிப்பாளர்கள் வருகிறார்கள். நிறைய உதவி இயக்குநர்கள் கதைகளோடு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். தயாரிப்பாளர் புகழ் வெற்றி பெற வாழ்த்துக்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர்  கணேஷ் விநாயக் பேசுகையில், “தேஜாவு படத்திலேயே மிகத்திறமையான திரைக்கதையுடன் அசத்தியவர் அரவிந்த் ஶ்ரீநிவாசன். இந்தப்படத்திலும் கண்டிப்பாக அசத்துவார். தயாரிப்பாளர் நிறையப் படங்கள் தயாரிக்க வேண்டும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.

 

தயாரிப்பாளர் கோபி பேசுகையில், “அரவிந்த் ஶ்ரீநிவாசன் எனக்கு பி ஆர் ஓ டீம் மூலம் தான் தெரியும். அந்தப்படம் பார்த்த பின் அவரை சந்தித்தேன். இந்தப்படத்தில் தயாரிப்பு செலவைக் குறைத்து நல்லதொரு வெற்றிப்படைப்பை தருவார்கள் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.” என்றார்.

 

எடிட்டர் அருள் இ சித்தார்த் பேசுகையில், “என்னைப் புதுமுகம் என்ற தயக்கமும் இல்லாமல் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் எனக்கு தேஜாவு படத்தில் வாய்ப்பு தந்தார். இந்தப்படம் பற்றிச் சொன்னபோது சம்பளமே பேச வேண்டாம் நான் செய்கிறேன் என்றேன். கிஷனுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என் மனைவி அவரின் ரசிகை. இந்தப் படம் செய்வது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜி பேசுகையில், “இந்தப்படம் படப்பிடிப்பிற்காக ஆவலுடன் உள்ளேன்.  இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசனுடன் ரொம்ப காலமாக வேலை செய்வதற்காகப் பேசிக்கொண்டிருந்தோம். கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் உடன் பணியாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வாய்ப்பிற்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் நன்றி.” என்றார்.

Related News

9020

’அமரன்’ படத்தை பார்த்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Thursday October-31 2024

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...

பரபரப்பான சம்பவங்கள் பின்னணியில் உருவான ‘முரா’ பட டிரைலர் வெளியானது!
Thursday October-31 2024

‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படம் ‘முரா’...

ஃபேண்டஸி காதல் படமாக உருவாகியுள்ள ‘மெஸன்ஜர்’!
Wednesday October-30 2024

பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...

Recent Gallery