’பூவரசம் பீபி’. ‘சில்லுக் கருப்பட்டி’, ‘ஏலே’, ‘புத்தம் புதிய காலை’ தொடரின் ஒரு பகுதி போன்ற படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் எழுதி இயக்கும் படம் ‘மின்மினி’. நடிகர்களின் உண்மையான வயதையும், பருவத்தையும் திரையில் காட்ட வேண்டும் என்பதற்காக 8 வருடங்களாக காத்திருந்து இப்படத்தை இயக்கும் முயற்சி திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பதோடு, ஆங்கர் பே ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தயாரிக்கவும் செய்திருக்கிறார். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பு செய்துள்ளார்.
எஸ்தர் அனில், பிரவின் கிஷோர், கெளரவ் காளை, பிரவின் மற்றும் கெளரவ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ‘மின்மினி’ படத்தின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா, இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கும் தகவலை படக்குழு அறிவித்துள்ளது.
கதீஜா ரஹ்மான், ஏற்கனவே பல பாடல்களில் தனது குரல் மூலம் இசை ஆர்வலர்களின் கவனத்தை வென்றுள்ள நிலையில், ‘மின்மினி’ படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...