யுடியுப் பிரபலமும், பேச்சாளருமான ராஜ்மோகன் ஆறுமுகம் ‘பாபா பிளாக் ஷீப்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பல வெற்றி படங்களை தயாரித்தும், விநியோகமும் செய்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கும் இப்படத்தில் டிஜிட்டல் உலகில் பிரபலமாக இருக்கும் பல இளைஞர்கள் நடிகர்களாக அறிமுகமாகிறார்கள்.
பள்ளிக்கால வாழ்வை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். யுகபாரதி,ஏ.பா.ராஜா, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், தனிக்கொடி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமான பள்ளிக்கால வாழ்க்கை திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயராகியுள்ள நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் உள்ள வளாகத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துக்கொண்டு படத்தின் படக்குழுவினர் ஒவ்வொருவரையும் மேடையில் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். அந்த வகையில், ‘பாபா பிளாக் ஷீப்’ டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா புதுமுகங்களில் பிரமாண்ட அறிமுக விழாவாகவும் நடைபெற்றது.
இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக ராஜ்மோகன் ஆறுமுகத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அறிமுகப்படுத்தி வாழ்த்தினார். அவரை தொடர்ந்து, இயக்குநர் லிங்குசாமி படத்தின் நாயகன் நரேந்திர பிரசாத்தை அறிமுகப்படுத்த, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றொரு ஹீரோவான அயாஸை அறிமுகப்படுத்தினார்.
நடிகர் இளவரசு குட்டி மூச்சி விவேக்கை அறிமுகப்படுத்த, நடிகர் மணிகண்டன் ராம் நிஷாந்தை அறிமுகப்படுத்தி வைத்தார். இயக்குநர் ஒபேலி கிருஷ்ணா நடிகர் பிரகதீஸ்வரனை அறிமுகப்படுத்த, நடிகர் பஞ்சு சுப்பு குட்டி வினோவை அறிமுகப்படுத்தினார்.
நடிகை வாணி போஜன் சேட்டை ஷெரீப்பை அறிமுகப்படுத்த, ஈரோடு மகேஷ் மற்றும் நடிகர் தர்ஷன் இணைந்து இப்படத்தின் மூலம் கதாநாயகியாக களம் இறங்கும் அம்மு அபிராமியை அறிமுகப்படுத்தினார்கள்.
விஜட் டிவி நட்சத்திரங்கள் இணைந்து அதிர்ச்சி அருணை அறிமுகப்படுத்த, சாய்ராம் கல்வி நிறுவனத்தின் தலைவர் சார்பிரகாஷ் ஹர்ஷத் கானை அறிமுகப்படுத்தினார். அவரை தொடர்ந்து ரியோ மற்றும் சுட்டி அரவிந்த் இணைந்து ஆர்ஜே விக்னேஷ் காந்தை மீண்டும் பள்ளி மாணவனாக அறிமுகப்படுத்தினார்கள்.
நட்சத்திரங்களின் அறிமுகம் முடிவடைந்த பிறகு படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது. படத்தின் டிரைலரை பார்த்த பிரபலங்கள் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் தான் திரையரங்கிற்கு வருகிறார்கள், இந்த டிரைலரும் அவர்களை கவரும் விதத்தில் இருப்பதால், படம் நிச்சயம் வெற்றி பெறும், என்று வாழ்த்தினார்கள்.
மேலும், படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியான ஒரு சில மணி நேரங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருப்பதோடு, பாடல்களும் இளைஞர்களின் காலர் ட்யூன்களாகியிருப்பது படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...