பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைத்து போட்டியாளர்களும் பெரிய அளவில் பிரபலமாகி வர, ஒருவர் மட்டும் எதிமறையாக பிரபலமாகியுள்ளார். அவர் தான் ஜுலி.
ஜல்லிக்கட்டு போராளி என்ற பட்டத்தோடு பிக் பாஸில் எண்ட்ரியான ஜுலி, ஓவியாவுடன் மோதலில் ஈடுபட்டார். இதன் காரணமாக அவரை கலாய்த்து ஓவியா ரசிகர்கள் மீம்ஸ்கள் வெளியிட்டதோடு, அவருக்கு எதிரான கருத்தையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு போட்டியாளர்கள் போகும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் பட்டாளம் சூழ்ந்துக்கொள்ள ஜூலிக்கும் மட்டும் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஜூலி நடனம் ஆடினார். பிறகு மைக் பிடித்து அவர் பேச முற்பட்ட போது, மாணவர்கள் “ஓவியா...ஓவியா....” என்று கத்தினர். இதனால் பேச முடியாமல் திணறிய ஜூலி, ஒரு கட்டத்தில் தான் பேச வந்ததை முழுமையாக பேசாமல், பாதியிலேயே புறப்பட்டார்.
ஜுலியின் இத்தகைய அவமானத்தை சமாளிக்கும் வகையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர், “ஜுலி நான் உங்க ரசிகன் தான்” என்று கூறி மழுப்பினார்.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...