Latest News :

குணச்சித்திரத்தை விட வில்லன் வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம் - நடிகர் அருள் டி.ஷங்கர்
Sunday June-18 2023

ஒரு கதாபாத்திரத்திற்காக உடல் எடையை குறைப்பது மற்றும் அதிகரிப்பது மட்டும் இன்றி தங்களை வருத்திக்கொண்டு அந்த கதாபாத்திரத்திற்காக பல மாதங்கள் உழைக்கும் ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே. இப்போது இவர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் அருள் டி.சங்கர்.

 

எந்த வேடமாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொருந்துவதோடு, தனது நடிப்பு மூலம் அந்த கதபாத்திரத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் திறன் படைத்த நடிகர் என்று அடையாளம் காணப்பட்டுள்ள அருள் டி.சங்கர், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்களிலும், கெட்டப்புகளிலும் நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார்.

 

’விடியும் முன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான அருள் டி.சங்கர், ‘எமன்’ படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் நடித்து மிரட்டியதோடு, அந்த படத்தில் இளம் வயது மற்றும் வயதான தோற்றத்தில் நடித்து பாராட்டு பெற்றார். அந்த படத்திற்காக அவர் மேற்கொண்ட முயற்சி மற்றும் அந்த கதாபாத்திரத்திற்காக தன்னை வருத்திக்கொண்டு தயாரான விதத்தை பார்த்து, அப்படத்தின் இயக்குநர் ஜீவா சங்கர், நாயகன் விஜய் ஆண்டனி ஆகியோர், அருள் டி.சங்கர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பார், என்று வாழ்த்தினார்கள். அவர்கள் சொன்னது போலவே தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை நோக்கி அருள் டி.சங்கர் பயணித்து வருகிறார்.

 

சமீபத்தில் வெளியான ‘பொம்மை’ படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் அருள் டி.சங்கரின் நடிப்பு மற்றும் அவருடைய மெனக்கடலை பார்த்துவிட்டு நடிகர் எஸ்.ஜே.சூர்யா, தொடர்ந்து நாம் சேர்ந்து நடிக்கலாம், என்று கூறியிருக்கிறாராம். தொடர் வாய்ப்புகள் மட்டும் இன்றி நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் தொடர்ந்து கிடைப்பதால் உற்சாகத்தில் இருக்கும் அருள் டி.சங்கர், நம்மிடையே தனது திரை பயணம் குறித்து பகிர்ந்துக்கொண்டது இதோ,

 

Arul D Shankar

 

”பொம்மை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ராதா மோகன் சாருக்காக தான் அந்த வேடத்தில் நடித்தேன். நான் வேறு கெட்டப்பில் இருந்தாலும் ராதா மோகன் சாருக்காக முடியை வெட்டிவிட்டு தான் அதில் நடித்தேன். எனக்கு கொடுக்கப்பட்ட வேடத்தை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இப்போது என் வேடத்தையும், நடிப்பையும் பலர் பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா சார் இன்னும் இரண்டு படங்களில் சேர்ந்து நடிக்கலாம் என்று கூறியிருக்கிறார். ராதா மோகன் சாருக்கும் நான் பேவரைட்டாக இருக்கிறேன். எனவே, ‘பொம்மை’ படத்தில் நடித்தது எனக்கு சிறந்த அனுபவத்தை கொடுத்தது.

 

‘எமன்’ படம் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இன்று வரை பல நல்ல நல்ல வேடங்களும், வித்தியாசமான கெட்டப்புகளிலும் நான் நடிக்க எமன் தான் காரணம். அந்த படத்தில் இளம் வயது மற்றும் வயதான தோற்றத்தில் நான் நடித்தது பார்க்க சாதாரணமாக இருக்கலாம். ஆனால், அதற்காக நான் மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறேன். இயக்குநர் ஜீவா சங்கர் முதலில் என்னிடம் தொப்பை போட முடியுமா? என்று கேட்டார். உடனே, 6 கிலோ தொப்பை வர வைத்தேன். அவரும் பார்த்துவிட்டு எதுவும் சொல்லவில்லை. ஆனால், நான் அந்த தொப்பையோடு சில மாதம் இருந்தேன். பிறகு தொப்பை வேண்டாம் என்று அவர் கூறியதும், உடனே தொப்பையை குறைக்க, கடினமாக உழைத்தேன். இப்படி அந்த கதாபாத்திரத்திற்காக அதிகமாக உழைத்ததால் தான் என்னை தேடி இப்போதுவரை பல வித்தியாசமான கெட்டப்புகள் வருகிறது.

 

வித்தியாசமான கெட்டப்புகளில் நடிப்பதால், அதிகமான படங்களில் என்னால் நடிக்க முடிவதில்லை. ஒரு படத்திற்காக அதிக முடி மற்றும் தாடியுடன் இருக்கும் போது, அது இல்லாமல் ஒரு வேடத்தில் நடிக்க வாய்ப்பு வரும்போது என்னால் அந்த படத்தை ஒப்புக்கொள்ள முடியாமல் போய்விடும். இது கொஞ்சம் எனக்கு வருத்தமாக இருந்தாலும், எந்த வேடமாக இருந்தாலும், எப்படிப்பட்ட கெட்டப் என்றாலும் என்னால் செய்ய முடியும் என்று இயக்குநர்கள் என் மீது வைக்கும் நம்பிக்கை எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. இந்த சந்தோஷம் எனக்கு போதும். பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து நான் சினிமாவில் பயணிக்கவில்லை. எந்த வேடமாக இருந்தாலும் நான் நடிக்க ரெடி, அது சின்ன வேடமோ அல்லது பெரிய வேடமோ என்று பார்ப்பதில்லை, அதில் எனக்கு நடிக்க கூடிய வாய்ப்பு இருந்தால் நான் நடிக்க ரெடியாக இருக்கிறேன். கலைத்தாயின் ஆசீர்வாதத்தால் எனக்கு வரும் வாய்ப்புகள் அனைத்தும் என் நடிப்பு திறமையை வெளிப்பத்துவது போல் தான் இருக்கிறது. அப்படிப்பட்ட வேடங்களை இயக்குநர்கள் என்னை நம்பி கொடுப்பது, கதாபாத்திரங்கள் மீது நான் காட்டும் மெனக்கெடல் தான் காரணம். தொடர்ந்து அப்படிப்பட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன்.

 

இந்த நேரத்தில் என் ஆசான் பாலு மகேந்திரா சாரை நான் மிஸ் பண்ணுகிறேன். முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், அந்த சான்றிதழை தனது பெற்றோர்களிடம் எப்படி ஆசையாக காட்டுவார்களோ, அதுபோல் நான் இப்போது அவரை ஒரு நிமிடம் சந்தித்து, நான் நடித்த வேடங்களை அவரிடம் காட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் அது நடக்காது. இருந்தாலும் இப்போதும் அவருடைய வீட்டுக்கு மாதம் ஒரு முறை சென்று நிற்பேன், அவர் சுவாசித்த இடங்களை சென்று பார்ப்பேன். 

 

பல படங்களில் முக்கியமான வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறேன். இயக்குநர்கள் சுந்தர்.சி, நலன் குமாரசாமி ஆகியோரது படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறேன். சுந்தர்.சி சார் படத்தில் சாதாரண லுக்கில் பெரிய வேடத்தில் நடித்திருக்கிறேன். நலன் குமாரசாமி சாரை 3 வருடங்களுக்கு பார்க்க அவர் அலுவலகம் சென்றேன். ஆனால், அவரை என்னால் சந்திக்க முடியவில்லை. அதை அப்படியே நான் மறந்துட்டேன். இப்போது அவர் படத்தில் நடிக்க என்னை அழைத்தார். அவரை சந்தித்த உடன் அவர் என்னிடம் “உங்கள் நடிப்புக்கு நான் ரசிகன் சார்” என்று சொன்னது என்னால் மறக்க முடியாது. அவரை நேரில் சந்திக்க முடியாமல் திரும்பினேன், ஆனால் அவர் என் நடிப்பை கவனித்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இன்னும் பல முன்னணி இயக்குநர்களின் படங்களில், முக்கியமான வேடங்களில் நடித்து வருகிறேன். சில படங்கள் பற்றி இப்போது பேச முடியாது. அடுத்தடுத்த என்னுடைய படங்கள் மிகப்பெரியதாக இருக்கும்.

 

Arul D Shankar

 

குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்தாலும், வில்லத்தனம் கொண்ட வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். அப்படிப்பட்ட வேடங்களை என்னால் மிக சிறப்பாக கையாள முடியும் என்று பாலு மகேந்திரா சார் கூட சொல்வார்.  எனது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்களில் அப்படிப்பட்ட வில்லன் வேடங்களில் தான் நடித்திருக்கிறேன். ’எமன்’ திரைப்படம் எப்படி எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்ததோடு, அதுபோல் உறியடி விஜயகுமார் படமும் என்னை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்று நம்புகிறேன், அப்படி ஒரு மிரட்டலான வேடம் அது. நகுல் சாருடன் நடிக்கும் படமும் மிரட்டலாக இருக்கும். மெளன குரு சாந்தகுமார் சார் படத்தில் நடித்து வருகிறேன். பல படங்களில் நடிக்கிறேன், அடுத்தடுத்த சந்திப்பில் அந்த படங்கள் பற்றி பேசுகிறேன்.” என்று கூறினார்.

 

அதிகமான வாய்ப்புகள் வந்தாலும், சாதாரணமாக அல்லாமல் தனது கதாபாத்திரம் பேசப்பட வேண்டும் என்பதில் கவனம் செலுத்தும் அருள் டி.சங்கர், தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாள திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

9041

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery