Latest News :

தயாரிப்பாளரான ’அண்ணாத்த’ நடிகை ரஞ்சனா நாச்சியார்!
Wednesday June-21 2023

திரைப்பட தயாரிப்பு என்பது மிகவும் சவலான விஷயம் என்று படம் தயாரித்த பல ஹீரோக்கள் சொல்லி வரும் நிலையில், நடிகை ரஞ்சனா நாச்சியார் திரைப்பட தயாரிப்பில் துணிச்சலாக இறங்கியிருப்பதோடு, ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களை தயாரிக்கும் அறிவிப்பை வெளியிட்டு தமிழ் சினிமாவையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

 

ராமநாதபுரம் சமஸ்தானம் ராஜா பாஸ்கர சேதுபதியின் பேத்தியும், இயக்குநர் பாலாவின் உடன்பிறந்த அண்ணன் மகளுமான ரஞ்சனா நாச்சியார், பொறியியலில் எம்.எஸ்.சி, எம் டெக் மற்றும் எல்எல்பி (ஹானர்ஸ்) என மிகப்பெரிய படிப்புகளை படித்துவிட்டு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் தமிழ் திரையுலகில் நுழைந்தார்.

 

‘துப்பறிவாளன்’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்து நடிகையாக அறிமுகமான ரஞ்சனா நாச்சியார், தொடர்ந்து ‘இரும்புத்திரை’, ‘டைரி’, ‘நட்பே துணை’, ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ என்று பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து பிரபலமானார். பிறகு கதை தேர்வில் கவனம் செலுத்தியவர், நல்ல கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார்.

 

இந்த நிலையில், நடிப்பை தொடர்ந்து அடுத்ததாக தயாரிப்புத் துறையிலும் அடியெடுத்து வைத்துள்ள ரஞ்சனா நாச்சியார், ஸ்டார் குரு பிலிம் புரொடக்‌ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் இரண்டு படங்களை தயாரிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

 

இதில் ஒரு படத்தை 'குட்டிப்புலி' புகழ் நகைச்சுவை நடிகரும் 'பில்லா பாண்டி', 'குலசாமி', 'கிளாஸ்மேட்ஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநருமான சரவண சக்தி இயக்குகிறார். 

 

இன்னொரு படத்தை விஜய் டிவி புகழ் நடிகரான அறிமுக இயக்குநர் சங்கர பாண்டியன் இயக்குகிறார். இரண்டு படங்களுமே கிராமத்து கதைக்களத்தில் உருவாக இருக்கின்றன.

 

திரைப்படத் தயாரிப்பில் இறங்கியது குறித்து நடிகை ரஞ்சனா கூறும்போது, “மிகப்பெரிய குடும்பத்திலிருந்து சினிமாவிற்கு வந்த போதும் கூட சினிமாவில் பெரிய அளவில் உன்னால் ஜெயிக்க முடியாது என்று தான் பலரும் கூறினார்கள். ஆனால் ஒரு நடிகையாக நல்ல இடத்தைப் பிடித்துள்ள நான் அடுத்ததாக படம் இயக்கவும் முடிவெடுத்துள்ளேன். 

 

அதன் முதற்கட்டமாக படங்களைத் தயாரித்து அதுபற்றிய நுணுக்கங்களை முழுவதும் அறிந்து கொள்வதற்காகவே தயாரிப்பு நிறுவனம் துவங்கி படங்களைத் தயாரிக்க முடிவு செய்தேன்.

 

பெரும்பாலும் ஆண்களே ஒரு படத்தை தயாரித்து முடித்த பின்னர் தான் அடுத்த படத்தை ஆரம்பிப்பார்கள், ஆனால் பெண்களாலும் வெற்றிகரமாக சாதிக்க முடியும் என்பதற்காகவே நான் ஒரே நேரத்தில் இரண்டு படங்களைத் தயாரிக்கும் துணிச்சலான முடிவை எடுத்துள்ளேன். 

 

இந்த இரண்டு படங்களிலும் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.” என்றார்.

Related News

9047

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery