Latest News :

என் மீதுள்ள விமர்சனத்தை ‘பம்பர்’ மாற்றும் - நடிகர் வெற்றி நம்பிக்கை
Sunday June-25 2023

‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’ என தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் வெற்றி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பம்பர்’. இதில் கதாநாயகியாக பிக் பாஸ் புகழ் ஷிவானி நாயகியாக நடித்திருக்கிறார். வேதா பிக்சர்ஸ் சார்பில் சு.தியாகராஜா தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் எம்.செல்வகுமார் இயக்கியிருக்கிறார்.

 

கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை கார்த்திக் நேத்தா எழுதியிருக்கிறார். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, மு.காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

 

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில், இயக்குநர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் இராதாகிருஷ்ணன், இயக்குநர்கள் முத்தையா, கோபிநாத், மந்திரமூர்த்தி, கணேஷ் கே.பாபு, அனீஷ், ரஃபிக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகன் வெற்றி, “முதன்முறையாக நான் ஒரு பாடலுக்கு நடனம் ஆட முயற்சி செய்துள்ளேன், தொடர்ந்து திரில்லர் படம் மட்டும் தான் செய்கிறேன் என்று என் மீது ஒரு விமர்சனம் இருக்கிறது, இந்த படத்தில் அது மாறும் என்று நம்புகிறேன். இயக்குநர் கதையின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார், அவர் நினைத்தது போல படம் வந்துள்ளது. இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் அனைத்து பாடல்களும் நன்றாக வந்துள்ளது, கண்டிப்பாக இந்த படம் உங்களுக்குப் பிடிக்கும், படத்திற்கு ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

நடிகை ஷிவானி பேசுகையில், “தயாரிப்பாளர் தியாகராஜா சார் படத்திற்குத் தேவையான அனைத்தும் கொடுத்துள்ளார், இயக்குநர் செல்வம் மிகுந்த உழைப்பை இந்த படத்திற்குக் கொடுத்துள்ளார், படம் பார்த்தால் உங்களுக்குக் கண்டிப்பாகப் புரியும். நடிகர் வெற்றி, மற்ற படங்களை விட இந்த படத்தில் கொஞ்சம் மாறுபட்டு நடித்துள்ளார். அனைவருக்கும் கண்டிப்பாக இப்படம் பிடிக்கும். படக்குழு அனைவருக்கும் நன்றி, படம் நன்றாக உள்ளது, உங்களுக்கும் பிடிக்கும்.” என்ப்றார்.

 

இயக்குநர் செல்வகுமார் பேசுகையில், “இந்த இடத்திற்கு நான் வந்ததற்குக் காரணமான பலர் இங்குள்ளனர் அவர்கள் அனைவருக்கும் நன்றி, என்னை நம்பி எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் தியாகராஜா அண்ணனுக்கு நன்றி. படம் நன்றாக வந்துள்ளது, இதற்கு உதவியாக இருந்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி. இது ஒரு குழு முயற்சி. இந்தப்படம் அழுத்தமான கருத்தைப் பேசும். கண்டிப்பாக இந்த படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

 

இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், “அறிமுக இயக்குநர் செல்வகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அவர் வேலை பார்த்த இயக்குநர்கள் இங்கு வந்துள்ளதை பார்க்கப் பெருமிதமாக இருக்கிறது. டிரைலர் நன்றாக உள்ளது. புரியாத பாடல்கள் தான் நிறைய வந்துகொண்டிருக்கிறன, ஆனால் இந்தப்படத்தில் பாடல்கள் கேட்க நன்றாக உள்ளது. நடிகர் வெற்றி முதல் படத்தில் தன் சொந்த பணத்தில் நடித்தார், அதிலும் நல்ல கதையாகத் தேர்ந்தெடுத்து நடித்தார். ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள். படத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் பாடல் பாடுபவர்கள் முதல் உரிமை இருக்கிறது. ஆனால் எழுத்தாளர்களுக்கு உரிமை இல்லாமல் இருக்கிறது. இதற்குக் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனப் போட்டுக்கொண்ட நானும் ஒரு காரணம். இது மாற வேண்டும். புதுத் தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துகள். படத்திற்கு ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசுகையில், “இந்த படத்தில் நான் ஆறு பாடல்களை எழுதியுள்ளேன், ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை, எல்லா பாடல்களும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு இருக்கும், அனைத்துமே நன்றாக இருக்கும். தயாரிப்பாளர் தியாகராஜன் அண்ணாவிற்கு வாழ்த்துகள், இந்தப்படம் அறத்தை அடிப்படையாகக் கொண்ட படம், கண்டிப்பாகப் படம் வெற்றி பெறும் வாழ்த்துகள்.” என்றார்.

 

Bumper Audio Launch

 

இயக்குநர் கணேஷ் கே.பாபு பேசுகையில், “படத்தின் டிரெய்லரை பார்க்கும்போது படம் டெக்னிக்கலாக வெற்றி பெற்றுள்ளது என்பது தெரிகிறது, நடிகர்கள் தேர்வும் கச்சிதமாக உள்ளது, நடிகர் வெற்றி அவருக்கென ஒரு தனி வெற்றிப் பாதையை வைத்துள்ளார். கண்டிப்பாக நாங்கள் இணைந்து ஒரு படம் செய்வோம், படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள், படம் வெற்றி பெற வாழ்த்துகள், நன்றி.” என்றார்.

 

இயக்குநர் மந்திரமூர்த்தி பேசுகையில், “பம்பர் படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை பார்த்தேன் படம் நம்பிக்கை அளிக்கிறது. வெற்றி சாரை எனக்கு நீண்ட நாட்களாகத் தெரியும், அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர். நான் அயோத்தி படம் எடுத்த போது தான் இந்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது, படம் பற்றிய தகவல்கள் அவ்வப்போது வரும். இது ஒரு நல்ல முயற்சி, கண்டிப்பாகப் படம் வெற்றி பெறும். அனைவருக்கும் என் வாழ்த்துகள்.” என்றார்.

 

இயக்குநர் முத்தையா பேசுகையில், “இயக்குநர் செல்வம் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார், அனைவருடனும் சுலபமாக இணைந்து பணியாற்றுவார். செல்வத்திடம் ஒரு நல்ல கிராமத்துச் சாயல் உள்ளது , என்னிடம் வந்து கதையைச் சொன்னார், நான்தான் தயாரிப்பதாக இருந்தது. நடிகர் வெற்றியிடம் கதை சொன்னதும் உடனே ஒத்துக்கொண்டு நடித்தார். அவருக்கு நன்றி. தயாரிப்பாளர் தியாகராஜா அவர்களுக்கு வாழ்த்துகள், இது போன்ற புது இயக்குநருக்கு வாய்ப்பு அளித்துள்ளார், படத்தின் டிரெய்லரைப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது, வெற்றி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் அவருக்கும் வாழ்த்துகள். படம் கண்டிப்பாக வெற்றியடையும், நன்றி.” என்றார்.

 

இயக்குநர் மீரா கதிரவன் பேசுகையில், “ஒரு இயக்குநர் வெற்றிப்படம் கொடுப்பதை மட்டும் வெற்றியாக நினைக்க மாட்டார்கள், தன் உதவியாளர்களும் படம் செய்வதை தான் வெற்றியாக பார்ப்பார்கள். அந்த வகையில் என் உதவியாளர் படம் செய்திருப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளருக்கு என் நன்றிகள். நடிகர் வெற்றியை தொடர்ந்து கவனித்து வருகிறேன், மிகச்சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருக்கு என் வாழ்த்துகள். இயக்குநர் செல்வகுமார் என்னிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பவர், மிக நல்ல மனதுக்காரர். இந்தக்கதை பற்றி சொல்லியிருக்கிறார். நல்ல டீம் இதில் வேலை பார்த்துள்ளனர். அனைவருக்கும் என் வாழ்த்துகள். படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.

 

தயாரிப்பாளர் திருமலை பேசுகையில், “நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு விழாவில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு வந்துள்ள அனைவருக்கும் திருக்குறள் புத்தகம் கொடுத்துள்ளனர், அதிலிருந்தே தெரிகிறது இந்தப்படம் அறத்தை பற்றி பேசும் என்று, இப்படி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து அதை தயாரிக்க ஒரு தைரியம் வேண்டும். தயாரிப்பாளர் தியாகராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள், வெற்றி பெயரிலேயே வெற்றியை கொண்டவர். அதனால் இப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும், சிறு முதலீட்டு படங்கள் வெற்றி பெறும் போதுதான் சினிமாத்துறை ஆரோக்கியமாக இருக்கும். இங்கு சில இளம் இயக்குநர்கள் வந்துள்ளனர், அவர்கள் இதற்கு சாட்சி. இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களின் வரிசையில் பம்பர் படம் கண்டிப்பாக இடம் பெறும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை, அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.” என்றார்.

 

கேரள மாநில ’பம்பர்’ லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள ’பம்பர்’ திரைப்படம் வரும் ஜூலை 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related News

9051

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery