துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரெர் பிலிம்ஸ் (Wayfarer Films) இணைந்து தயாரிக்கிறது.
மாஸான ஒரு கமர்ஷியல் படத்திற்குரிய அனைத்து அம்சங்களையும் இப்படம் கொண்டுள்ள இப்படத்தின் ஒவ்வொரு தகவலுக்காகவும், ரசிகர்கள் ஏங்கி வரும் வேளையில், இப்படத்தின் கதாப்பாத்திரங்கள் குறித்த அதிரடியான அறிமுக வீடியோவை சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு வீடியோ, படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களை சுவாரஸ்யமான ஸ்கெட்ச் வடிவில் அறிமுகப்படுத்துகிறது. அதிலும் துல்கர் சல்மானை 'ராஜாவாக' சித்தரித்திருப்பது, ரசிகர்களிடம் மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கும் வகையில், அசத்தலாக அமைந்துள்ளது.
இப்படத்தில் துல்கர் சல்மான் உடன், டான்சிங் ரோஸ் சபிர், பிரசன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, நைலா உஷா, செம்பன் வினோத், கோகுல் சுரேஷ், ஷம்மி திலகன், சாந்தி கிருஷ்ணா, வட சென்னை சரண், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
துல்கர் சல்மானுக்கு உள்ள மிகப்பெரும் வரவேற்பையும், ஓணம் பண்டிகையின் விடுமுறை காலத்தையும், பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இப்படத்தை வரும் ஓணம் பண்டிகைக்கு வெளியிட Zee Studios மற்றும் Wayfarer Films நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இப்படத்திற்கு ஷான் ரஹ்மான் மற்றும் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளனர்.
எதிர்பார்ப்புமிக்க இப்படத்தின் டீசர் வரும் ஜூன் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...