பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான ஷாருக்கான் திரையுலகில் அறிமுகமாகி 31 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் அவர் சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். இதில், தனது திரை பயணம் மற்றும் அனுபவங்கள் பற்றி பகிர்ந்துக்கொள்பவர், ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்.
இந்த நிகழ்வை ஒவ்வொரு மாதந்தோறும் நடத்தி வரும் ஷாருக்கான், தனது பிஸியான பணியின் நடுவே ரசிகர்களுடன் உரையாடுவதை தவறுவதில்லை. #AskSRK என்ற தலைப்பில் நடிகர் ஷாருக்கான் நடத்தி வரும் இந்த கலந்துரையாடலில், அவருடைய பதில்கள் மற்றும் பேச்சுக்கள் இணையதளம் மற்றும் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் அவர் திரையுலகில் அறிமுகமாகி 31 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ரசிகர்களுடனான இணையதள உரையாடல் சுவாரசியமாகவும், உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது. வழக்கம்போல் இந்த முறையும் அவர் பேசிய பேச்சுக்கள் மற்றும் அளித்த பதில்கள் அவருடைய மேதமை தன்மையை வெளிப்படுத்தி வியப்படைய வைத்தது. மேலும் 'ஜவான்' படத்தின் சில ரகசியங்களை குறிப்பிட்டு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரிக்க வைத்திருக்கிறார். திரையுலக பயணம் குறித்தும் பல விசயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
31வருட திரையுலக பயணம் குறித்து ஷாருக்கான் பேசுகையில், ”நான் இன்று வரை தொடர்ந்து கடைபிடித்து வரும் விசயம் இதுதான். நான் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முழு பின்னணியும், அதன் சித்தாந்தத்தையும் எழுத வேண்டும் என விரும்புகிறேன். சில தருணங்களில் அதனை இயக்குநர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். சில தருணங்களில் எனக்குள் தோன்றிய விசயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் எனக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்கிறேன். அது ஒரு கவிதையாகவோ அல்லது முழு கதையாக கூட இருக்கலாம்.” என பதிலளித்தார்.
உரையாடலில் ஒரு ரசிகர், ”கருவுற்றிருக்கும் இரட்டை குழந்தைகளுக்கு நானும், என் மனைவியும் இணைந்து அவர்களுக்கு 'பதான்' மற்றும் 'ஜவான்' என பெயரிட திட்டமிட்டிருக்கிறோம்'' என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ஷாருக்கான், ''வாழ்த்துக்கள். ஆனால் அவர்களுக்கு வேறு ஏதாவது சிறப்பான பெயரை வைக்கலாம்” என்றார்.
மேலும் ஒரு ரசிகர், ”ஜவான் படத்தில் என்னுடைய நண்பருக்கு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?'' எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த ஷாருக்,'' கிடைக்காது என்பதை உங்கள் அன்பு நண்பரிடம் நீங்கள் விளக்க வேண்டும்”என்றார்.
ஜவானின் மகிழ்ச்சியான விசயம் என்ன? என குறித்து ரசிகர் கேட்டதற்கு, '' இல்லை மகனே..! நான் என் இளமை காலத்தில் உற்சாகத்துடன் திரையரங்கத்திற்கு சென்று படங்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். அது போன்ற ஒரு சந்தோஷத்தை ஜவான் உங்களுக்கு அளிக்கும்'' என்றார்.
'ஜவான்' பட டீசர் குறித்து கேட்டபோது, ”எல்லாம் தயாராக இருக்கிறது. கவலை வேண்டாம். சரியான நேரத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கும், பெறுவதற்கும் பொக்கிஷம் போல் தயாராக இருக்கிறது.” என்றார்.
புதிதாக பட்டம் பெற்ற பட்டதாரிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஷாருக், “நல்வாழ்த்துக்கள். நீங்கள் கற்றுக் கொண்டதை சில சமயங்களில் நினைவில் வைத்துக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்.” என்றார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...