ஜெயலலிதா மறைவுக்கு பின்னால் தமிழகத்தில் பல அதிர்ச்சி சம்பவங்களில் ஒன்று தீபாவின் அரசியல் எண்ட்ரி. அதிலும், தீபாவின் கணவர் மாதவன் திடீரென்று தனி கட்சி தொடங்கியது. பிறகு தீபாவை பிரிந்து சென்றது. பிறகு மீண்டும் இணைந்தது என்று தமிழக தொலைக்காட்சிகளுக்கு பல மாதங்களாக செய்தி கொடுத்து வந்த தீபா - மாதவன் கூட்டணி இப்போது புது செய்தியை கொடுத்திருக்கிறது.
தீபா கணவர் மாதவன், நல்லா நடிக்கிறாரே!, என்று பலர் யோசித்திருப்பார்கள். ஆனால், உண்மையிலேயே அவரும் ஒரு நடிகர் தான். தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தில் தீபா கணவர் மாதவன் உறுப்பினராம்.
இன்று நடைபெற உள்ள நடிகர்கள் சங்கத்தின் 64 வது பொதுக்குழு கூட்டத்தில் மாதவன் பங்கேற்பதுடன், அவர் விஷால் அணிக்கு ஆதரவும் தெரிவிக்க போகிறாராம்.
இதுநாள் வரை இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருந்தது. தற்போது மாதவன் அரசியலில் இறங்கியதால், நடிகர்கள் சங்கத்தில் தானும் உறுப்பினர் என்பதை காட்டுவதற்காகவே, இன்றைய பொதுக் குழுவின் பங்கேற்க உள்ளாராம்.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...