‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வடிவேலு இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படம் நாளை (ஜூன் 29) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்த நிலையில், டிரைலர் வெளியாகி அந்த எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்திருக்கிறது.
இந்த நிலையில், ‘மாமன்னன்’ படத்தை பார்த்த நடிகர் தனுஷ், படத்தை வெகுவாக பாராட்டி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், ”மாரி செல்வராஜின் மாமன்னன் உணர்ச்சிபூர்வமானது. வடிவேலு சார் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் திறமையான நடிப்பை கொடுத்துள்ளனர். இடைவேளை காட்சிகள் சரவெடியாக இருக்கும். இறுதியாக ஏ.ஆர்.ரகுமான் இசை மிகவும் அழகாக உள்ளது.:” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...