ரஜினிகாந்தின் இளைய மகளான செளந்தர்யா, வெளிநாட்டில் கிராபிக்ஸ் தொடர்பான துறையில் பட்டம் பெற்று திரைப்படங்களில் கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றி வந்தார். ரஜினிகாந்தின் ‘படையப்பா’, ‘பாபா’, ’சந்திரமுகி’ உள்ளிட்ட பல படங்களில் கிராபிக் டிசைனராக பணியாற்றியவர், ரஜினிகாந்தை வைத்து முழுக்க முழுக்க அனிமேஷனில் உருவாக்கபப்ட்ட ‘கோச்சடையான்’ என்ற படத்தை இயக்கி தயாரித்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு பெற்றி வெறவில்லை.
அதே போல், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோவா’ என்ற படத்தையும் செளந்தர்யா தயாரித்தார். அந்த படமும் பெரிய வரவேற்பு பெறாததால், திரைப்பட தயாரிப்பில் இருந்து ஒதுங்கியவர், தனுஷை வைத்து ‘வேலையில்லா பட்டதாரி 2’ அப்டத்தை இயக்கினார், அந்த படமும் அவருக்கு கைகொடுக்காததால் சினிமாவை விட்டு ஒதுங்கியவர், இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டு குடும்பம் குழந்தை என வாழ தொடங்கினார்.
இந்த நிலையில், செளந்தர்யா ரஜினிகாந்த் மீண்டும் சினிமா பக்கம் திரும்பியிருக்கிறார். இந்த முறை தயாரிப்பாளராக ரீ எண்ட்ரி கொடுத்திருப்பவர், அமேசான் தளத்திற்காக இணையத் தொடர் ஒன்றை தயாரிக்க இருக்கிறார். அறிமுக இயக்குநர் ஆபிரகாம் என்பவர் இயக்கும் இந்த இணையத் தொடர் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானர் தொடராக உருவாக இருக்கிறதாம்.
கேங்க்ஸ்டர் கதையம்சம் கொண்ட இந்த தொடரில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம். அசோக் செல்வன் காவல்துறை அதிகாரியாக நடித்த ‘போர் தொழில்’ மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரை வைத்து ஆக்ஷன் படம் எடுக்க பலர் முன் வருகிறார்களாம். அதில், முதலாவதாக செளந்தர்யா அசோக் செல்வனை வைத்து கேங்ஸ்டார் தொடர் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
இந்த தொடரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...