மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையான நடிகர் ஜெய் சைதாபேட்டை நீதிமன்ற்த்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜெய் மீது நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
மேலும் 2 நாட்களில் நடிகர் ஜெய்யை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து நடிகர் ஜெய் நேற்று சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். பிறகு அவரை நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தினர். அப்போது, ”திரைப்படத்தில் வருவது போலவே வாழ்க்கையையும் நினைத்துவிடாதீர்கள்” என்று நீதிபதி ஆபிரகாம் லிங்கன் ஜெய்க்கு அறிவுரை வழங்கினார்.
ஜெய் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதால், அவரது ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி, ரூ.5200 அபராதம் விதித்தார்.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...