அறிமுக இயக்குநர் ராஜா குருசாமி இயக்கத்தில், முனீஷ்காந்த், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘காடப்புறா கலைக்குழு’. சக்தி சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர்.முருகானந்தம் வீரராகவன் மற்றும் டாக்டர்.சண்முகப்பெரியா முருகானந்தம் தயாரித்திருக்கும் இப்படம், கரகாட்ட கலையின் பின்னணி நகைச்சுவை கலந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது.
வினோத் காந்தி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஹென்றி இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
இதில் கலந்துக்கொண்டு படம் குறித்து பேசிய நடிகர் முனீஷ்காந்த், ”இந்தப் படம் முண்டாசுப்பட்டி படம் போன்று ஒரு குழுவாகச் சேர்ந்து உருவாக்கியுள்ளோம், அனைவரும் இணைந்து கலகலப்பாகப் படப்பிடிப்பை நடத்தினோம், இயக்குநர் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார், இந்தப் படத்தின் மீது மிகவும் நம்பிக்கை வைத்து இரவு பகல் பாராமல் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். இப்படி ஒரு கலைப் படைப்பை உருவாக்கியுள்ள தயாரிப்பாளருக்கு நன்றி. நான் இந்த படத்தில் கரகாட்டம் ஆட முயற்சி செய்துள்ளேன், அது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது , படம் கண்டிப்பாக வெற்றியடையும் வாழ்த்துகள்.” என்றார்.
நடிகர் காளி வெங்கட் பேசுகையில், “எனக்கு இது மிக முக்கியமான படம், இயக்குநர் குறும்படம் எடுத்த காலத்திலிருந்தே எனக்குப் பழக்கம். ராஜா குருசாமி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் படம் செய்தது எனக்கு மகிழ்ச்சி. அவருக்குப் படம் தந்ததற்காகத் தயாரிப்பாளருக்கு நன்றி. தயாரிப்பாளர் புரொடக்சனில் தேவைப்படும் அத்தனையும் வாங்கி வைத்து விட்டார். கண்டிப்பாகத் தொடர்ந்து படம் எடுப்பார், அவருக்கு வாழ்த்துக்கள். ஹென்றி மிக எளிமையாக அனைவருக்கும் பிடிக்கும் படி இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் முனீஷ்காந்த் இங்கு ஆடியதை வீடியோவில் பார்த்தேன், அவருடன் தொடர்ந்து பணியாற்றுவது மிக மகிழ்ச்சி. லொக்கேஷனில் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்தார்கள் அவருக்கு நன்றி. தனுஷ் சார் இந்தப்படத்தின் டிரெய்லர் பார்த்துப் பாராட்டினார். உங்களுக்கும் படம் பிடிக்கும் நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் டாக்டர் முருகானந்தம் வீரராகவன் பேசுகையில், “எங்கள் விழாவிற்கு வருகைக்குத் தந்துள்ள அனைவருக்கும் நன்றி. நான் அறிவியல் துறையில் பணியாற்றி வந்தவன், ஆனாலும் என்னிடம் கலை ஆர்வம் குறையவே இல்லை. எனவே என் துறையில் சாதித்த பிறகு எனக்குப் பிடித்த துறைக்கு வந்துள்ளேன். சினிமா எனக்கு இன்ஸ்பிரேஷன். எனது ஆர்வம் தான் உங்கள் முன் என்னைத் தயாரிப்பாளராக நிறுத்தியுள்ளது. ‘காடப்புறா கலைக்குழு’ படத்தில் உங்களை ரசிக்க வைக்கும் அனைத்து அம்சங்களும் உள்ளது. தொடர்ந்து எங்கள் நிறுவனம் மூலம் நல்ல படைப்புகளை தருவோம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார்.
இயக்குநர் ராஜா குருசாமி பேசுகையில், “முதலில் என் தயாரிப்பாளர் இல்லாமல் நான் இல்லை , அவருக்கு நன்றி. படக்குழு அனைவருக்கும் நன்றி எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்துள்ளீர்கள் , முகச்சுளிப்பு இல்லாமல் இரத்தக் காட்சிகள் இல்லாமல், குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படமாக இந்தப் படம் இருக்கும், நீங்கள் பார்த்து விட்டு உங்கள் ஆதரவைத் தர வேண்டும் நன்றி.” என்றார்.
நடிகை ஸ்வேதா ரமேஷ் பேசுகையில், “இது எனக்கு முதல் படம் , எனக்கு நீங்கள் உங்கள் ஆதரவைத் தர வேண்டும், படத்தைப் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், படக்குழு அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நடிகை ஶ்ரீலேகா ராஜேந்திரன் பேசுகையில், “எல்லோரும் மிகக் கடினமாக உழைத்துள்ளார்கள். நான் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் தான் நடித்துள்ளேன், ஆனால் மனதுக்கு நிறைவான கதாபாத்திரம். இப்போது பழமையான கலைகள் அழிந்து வருகிறது. நான் செத்தாலும் ஆயிரம் பொன் என ஒரு படம் நடித்தேன், அதில் ஒப்பாரி அழிந்து போவதைப் பற்றி எடுத்தார்கள். இந்தப்படத்தில் கரகாட்டத்தை எடுத்துள்ளார்கள். இயக்குநர் காலில் அடிபட்டாலும் கட்டுப்போட்டுக் கொண்டு இயக்கினார். இந்தப் படம் கண்டிப்பாக ஜெயிக்கும். தயாரிப்பாளர் கலையின் மீதான அன்பில் இப்படத்தை எடுத்துள்ளார். உங்கள் ஆதரவை இந்தப்படத்திற்குத் தாருங்கள் நன்றி.” என்றார்.
சிறப்பு விருந்தினர் நீலமேகம் பேசுகையில், “இந்தப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் இயக்குநர் மற்றும் குழுவிற்கும் எனது நன்றிகள். கள்ளக்குறிச்சி பக்கத்தில் எடுத்தவாய்நத்தம் எங்கள் கிராமம். இயக்குநர் எங்கள் ஊர்ப்பக்கம் படம் எடுக்கனும் என்றார். கலையை வளர்க்கும் நோக்கில் இந்தப்படக்குழு பணியாற்றினார்கள். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்துள்ளேன். இப்போது உங்களிடம் இப்படத்தை விட்டோம். படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள் நன்றி.” என்றார்.
இசையமைப்பாளர் ஹென்றி பேசுகையில், “இந்த வாய்ப்பை எனக்கு அளித்த தயாரிப்பாளருக்கு நன்றி, என் இசையை நம்பி என்னைத் தேர்வு செய்த இயக்குநர் ராஜ குருசாமி அவர்களுக்கும் எனது நன்றி. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.
நடிகை சுவாதி முத்து பேசுகையில், “முதலில் கடவுளுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், இது எனக்கு முதல் படம், படக்குழு அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், இந்தப் படம் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டிய படம். உங்கள் அனைவருக்கும் நன்றி, என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றி அவர்கள் இல்லாமல் நான் இல்லை, படத்திற்கு உங்கள் ஆதரவு வேண்டும் நன்றி.” என்றார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’...
‘கப்பேலா’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘முரா’...
பி.வி.கே ஃபிலிம் ஃபேக்டரி (PVK FILM FACTORY) சார்பில் பா...