இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருக்கும் ‘மாமன்னன்’ திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் வெளியீட்டு முன்பே பல அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் விதமாக படம் அமைந்ததால், மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார்.
ரெய் ஜெயண்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி, ஆர்.அர்ஜுன் துரை, ரெட் ஜெயண்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி சி.ராஜா ஆகியோருடன் உதயந்தி ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜ் வீட்டுக்கு நேரடியாக சென்று காரை பரிசளித்தார்.
உதயநிதியுடன் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் என முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் மிரட்டியிருக்கும் ‘மாமன்னன்’ படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...