கே.ஜி.எப் படம் மூலம் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த ஹம்பாலி பிலிம்ஸ் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகியிருக்கும் மற்றொரு பிரமாண்ட ஆக்ஷன் திரைப்படம் ‘சலார்’. இதில், ‘பாகுபலி’ புகழ் பிரபாஸ் நாயகனாக நடித்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்களு அதிகரித்திருக்கிறது.
இந்த ஆண்டில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியப் படங்களில் ஒன்றாக ’சலார்’ இருக்கிறது. இந்த மெகா பட்ஜெட் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தயாரிப்பாளர்கள் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, ‘சலார்’ படத்தின் டீசர் வரும் ஜூலை 6 ஆம் தேதி வெளியாக உள்ளது. மிக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, ஹம்பாலி பிலிம்ஸ் நிறுவனம், இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் 'சலார்' படத்தின் டீசரை, ஜூலை 6 ஆம் தேதி வெளியிடவுள்ளது. அனைத்து மொழிகளுக்கும் சேர்த்து ஒரே டீசராக, இந்த டீசர் வெளியாகும்.
கேஜிஎப் 2 மற்றும் காந்தாரா போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்து 2022 ஆம் ஆண்டை மிகப்பெரிய வெற்றி ஆண்டாக கொண்டாடிய Hombale Films நிறுவனத்தின் அடுத்த பிரமாண்ட படைப்பாக, பிரபாஸ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில், ‘சலார்’ பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளைப் படைக்கப்போகிறது. படத்தின் டீஸர் மூலம் இந்த மிகப் பிரமாண்ட படைப்பில் சில காட்சிகளைக் கண்டுகளிக்கும் உற்சாகம் ரசிகர்களிடையே பெரும் உச்சத்தில் உள்ளது.
பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதிஹாசன் மற்றும் ஜெகபதி பாபு உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘சலார்’ திரைப்படம் செப்டம்பர் 28, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...