கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘ஜிகர்தண்டா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது.
இந்த நிலையில், ‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என்ற தலைப்பில் எடுக்கப் போவதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அறிவித்த நாள் முதலே இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஸ்டோன்பெஞ்ச் பிலிம்சின் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் மற்றும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பில் உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் முடிவடைந்த நிலையில், படத்தின் வெளியீட்டுக்கான பணியில் ஈடுபட்ட தயாரிப்பு தரப்பு தற்போது வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஆக, இந்த வருட தீபாவளி பந்தயத்தில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் பங்கேற்பது உறுதியாகி விட்டது.
இது குறித்து கூறிய தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், “படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பிரமாண்டமான திரைப்படம் அதிகப்பொருட்செலவில் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை திரைக்கு கொண்டு வர நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், “எங்கள் அனைவருக்கும் மிகவும் திருப்தியளிக்கும் அனுபவமாக 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படப்பிடிப்பு அமைந்திருந்தது. மிகவும் அழகான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படம் சிறப்பாக உருவாகியுள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு தற்போது நாங்கள் தயாராக உள்ளோம். பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' வழங்கும் என்று நான் நம்புகிறேன். இந்த மிகப்பெரிய படத்திற்கு ஆதரவளித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.” என்றார்.
'மெர்குரி' மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' போன்ற படங்களில் கார்த்திக் சுப்பராஜுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றிய, தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு, ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, தேசிய விருது பெற்ற விவேக் ஹர்ஷனின் உதவியாளரான ஷஃபிக் முகமது அலி படத்தொகுப்பை கையாளுகிறார்.
ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...